நாகரீக வளர்ச்சி என்ற பெயரில்
நாசமாகிறது புனித உறவுகள்
வயதை எண்ணி குடும்ப கவலைகளை தோளில் ஏற்று
தோள் கொடுக்கும் சந்தர்ப்பத்தில்
தனக்கென்று துணைத்தேடி
இளசுகளாக மாறும் பெரிசுகள் ஒருபுறம்
பிள்ளைகளாய் கல்வி பயிலும் நேரத்தில்
புகைப்படங்களை பிடித்து இணையத்தில் போட்டு
புதிய உறவுகள் தேடும் சிறுசுகள் மறுபுறம்
பிள்ளைகளைக் கூட கவனிக்க நேரமின்றி
பணத்தின் பின்னால் ஓடும் பெற்றோரும்
உறவுகளை மறந்து பொறாமை சூழ்ச்சியில்
மூழ்கிக் கிடக்கும் சொந்தகளும்…..
எதற்க்கு இத்தனை ஆட்டங்கள் ஓட்டங்கள்…
எதை அடைய இத்தனை போராட்டங்கள்
அன்பின் புனிதம் மறந்து போனதா..
இல்லை இதயங்கள் மரத்து போனதா….
நாகரீகம் நாட்டை மாயையில் மூழ்கடிக்குது
நடக்கும் அநியாங்கள் நெஞ்சை பதறடிக்குது
பிஞ்சிகளின் கொலைகள் நெஞ்சை உலுக்குது
கொஞ்ச நாளில் உலகம் என்னவாகும்
மனசில் எண்ணத் தோணுது….
எத்தனை மாயையில் மிதந்தாலும்
செத்ததும் வரும் செய்தவைதான்…
அத்து மீறி சொத்து சேர்த்தாலும்…
பிள்ளை வாழ்வில் வெளிச்சம் இல்லையென்றால்
நீயும் ஓர் ஏழைத்தான்
பாவத்தின் சொந்தகாரன்தான்…
பா.க்ரிஷானி…







நிஐத்தின் நிழல்கள்
வாழ்த்துகள் கவிஞரே
நிஜத்தின் நிழல்கள்
வாழ்த்துகள் கவிஞரே