ஆடைகளை அறிந்து அணிவோம் – பகுதி 3

மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு

மேலை நாடுகள் என்றால் அவை எல்லா விடயங்களிலும் உயர்வானவை என்று ஒரு மாயத் தோற்றம் எமக்குள் உண்டு. இன்று மேலை நாடுகள் மட்டுமன்றி வேறு கீழைத்தேச நாகரிகங்களும் நம்மிடையே புகுத்தப்படுகிறது.

ஆடை விடையத்தில் இது உண்மையில் அளவோடு இருந்தால் தான் சிறப்பு. நாம் ஓர் சிறந்த ஆடைக் கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்கள். எதை எடுக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது எமக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.

மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், அதனால் பொருத்தமான ஆடைகளை அவற்றில் தெரிவு செய்து அணிந்து கொள்ளலாம். ஆனால், யாரோ அணிகிறார்கள் என்று பொதுவெளியில் ஆடைகுறைப்பை நாகரிகமாகவும் ஒரு தகுதியாகவும் நினைப்பது அபத்தமானது.

மேலும், இன்றைய உலகமயமாக்கல், இன்றைய இணையமயமாக்கல் மற்றும் இன்றைய சமூக வலைத்தளப் பரவுகைகள் எமது ஆடை கலாசாரத்தை மேலைத்தேயத்தோர் பின்பற்றுவதும் அங்கங்கே அவதானிக்கத் தக்கதாகவே இருக்கின்றது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நன்றி

 

பகுதி 1 – அறிமுகம்

பகுதி 2 – ஆள் பாதி ஆடை பாதி

Add Comment