தயவு செய்து பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்துங்கள்.

தயவு செய்து( பேரூந்து) பஸ் தரிப்பிடத்தைப் # use bus stops பயன்படுத்துங்கள்

நம்மில் எத்தனை பேர் பஸ் #busStop தரிப்பிடம் இல்லாத இடங்களில் பஸ்ஸினை கை காட்டி நிறுத்தி ஏறுவதுண்டு?

நம்மில் எத்தனை பேர் தயார் நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் (பஸ்ஸில்) பின் வாசலில் ஏறுவதுண்டு?

ஏறும் போது பின் கதவருகில் பல தட்டுகள் தட்டி (பஸ்ஸிற்கு நாலு அடி போட்டு) நடத்துனரை alert அலேர்ட் செய்து, பேரூந்தை மெதுவாக நிறுத்திய பின் ஏறுவதும் உண்டல்லவா?

நம்மில் எத்தனை பேர், பேரூந்து ஓடத்தொடங்கும் வரை நின்று விட்டு, ஓடத்தொடங்கும் போது , ஓடிச்சென்று ஏறுவதுண்டு? உங்கள் வீர தீரச் செயல்களைக் காட்டுவதற்கென்று நிறைய பாதுகாப்பான விளையாட்டுக்கள் நிறைய உண்டு. (விளையாட்டு? நாங்கள் தான் அந்தப் பக்கம் போகவே மாட்டோமே என்று எண்ணுபவர்களாக நீங்கள்…) எத்தனை கேட்கக் கூடாத செய்திகள், அகால மரணம் தொடர்பான செய்திகள் படித்தாலும் படித்ததும் மறந்து விடும் இயல்பு கொண்டவர்கள் தானே நாம். இப்போதெல்லாம் செய்திகள் படிக்கிறோமா கேட்கிறோமா அது வேறு கதை.

சரி, எத்தனை பேருக்கு இத்தனை மணிக்கு இந்த பேரூந்து இந்த தரிப்பிடத்திற்கு வரும் என்று தெரிந்து பயணங்களை மேற்கொள்கிறோம்?

நெடுந்தூர பயணங்களை திட்டமிடுவது போல் ஏன் குறுந்தூர பிரயாணங்களைத் திட்டமிடுவதில்லை?

இதற்கு என்ன காரணம்? சரியான நேரத்திட்டமிடல் இல்லாதது தான் காரணம் அல்லவா? எப்போது வேண்டுமானாலும், இந்த வழி செல்லும் பேரூந்துகள் வந்து கொண்டிருக்கும் ஏறலாம் என்ற அலட்சியம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?

நடுவழியில் ஏறும் ஒவ்வொரு நபரும் பயணத்தை சற்று தாமதமாக்குகிறார் அல்லவா? சரியான நேரத்திற்கு நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியாவிட்டால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். எமது பிரயாணத்தை நாம் சரியாகத் திட்டமிடாததனால் மற்றவர்களின் பயணத்தை பாதிக்கும்
வகையில் நடந்து கொள்கிறோம். பலர் பேரூந்து பயணத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களும் உண்டு. சில வேளைகளில் வேறு போக்குவரத்து மார்க்கங்களைத் அவர்களால் தேடவும் முடியாமல் இருக்கலாம்.

இது சிறிய விடயம் என்று அலட்சியப்படுத்த முடியாது. வாகன நெரிசலில் மிகப்பெரிய பங்கு பேருந்துகளுக்குத் தான் உண்டு. என்ன தான் பஸ் லேன் bus lane என்று கால வரையறையோடு கொண்டுவரப்பட்டாலும் இது பற்றிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எமது மேம்போக்கான நடத்தை முட்டுக்கட்டையாக இருப்பதை நாம் உணர வேண்டும்.

நடத்துனர் மட்டும் கண்ட இடத்தில் ஆட்களை ஏற்ற முடியுமா என்று கேட்டால், ஒன்றை சொல்ல முடியும். நீங்கள் ஏறவே மாட்டீர்கள் என்றால் அவர்களும் நிறுத்தமாட்டார்கள்.

நீங்கள் இங்கே, படத்தில் பார்ப்பது ஒரு பேருந்தில் காட்சிப்படுத்தப்பட்ட வாசகமாகும். இதைப் பார்க்கும் போது நடத்துனரோ ஓட்டுனரோ சரியாக இருப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று புரிகிறதா?

use-bus-stop-advice-inside-the-bus

எழுந்தமானமாக பேரூந்தில் ஏறுவதைத் தவிர்ப்பதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும்; வாகன நெரிசலைக் குறைக்க முடியும்; மற்ற பயணிகளின் அசௌகரியத்தைக் குறைக்க முடியும்; சட்டங்களை ஏற்படுத்த இலகுதன்மை ஏற்படும்; போக்குவரத்தை நெறிப்படுத்த முடியும்; உங்கள் மேல் மற்றவர்களுக்கு ஓர் மரியாதை ஏற்படும்; ஏன் உங்கள் மீதே உங்களுக்கு ஓர் மரியாதை ஏற்படும்.

முதலில் நாம் திருந்துவோம்….!!!!!!!

Add Comment