மதமில்லா மதம் வேண்டும்

religion

 

மதம்…..!!!!!?????!!!!!????!!!!!
இறைவனை அடையும் வழியாம்
எல்லா மதங்களும் அன்பு
ஒன்றையே போதிக்கின்றதாம்…

என்னைக் கேட்டால் இதுவே உலகின்
மிகப் பெரிய ஆச்சரியம்……….!!!!!!!!!!

இத்தனை ஆண்டுகளாய்…
இத்தனை பாரம்பரியங்களாய்..
எத்தனை எத்தனை மதங்கள்.
மதங்களுக்குரிய தலங்கள் …
எவ்வளவு விதமான வழிபாடுகள்…

மானுட தார்ப்பரியங்களை இவை போதித்திருக்க வேண்டுமன்றோ
இத்தனை ஆண்டுகளாய்…. இத்தனை தலைமுறைகளாய்…..

எழுதிவைக்கப்பட்ட மதம் சார்
ஏடுகள் ஆயிரம் உண்டு….
பல தலைமுறைகளாய்
பள்ளிப்பாட நூல்களில் மதமும் உண்டு ….
பல்சமூக நாடுகளில் ஓரே நபர்
பல் மதங்களும் கற்றறியும்
வாய்ப்புகளும் உண்டு …..
மதம் சார்ந்த வரலாற்றை ஆராய
ஆராய்ச்சியாளர்கள் உண்டு ….
பல்வேறு மதங்களினதும் தர்மங்களை
ஆராய பீடங்களும் உண்டு …..

இருந்தும் மானுட இன்னல்கள்
குறைய வில்லை ….
மனித பேதங்கள் மறையவில்லை …
வறுமை மாறவில்லை …
சுரண்டல்கள் ஓயவில்லை …

ஆதாயம்-வெறுப்பு-பொறாமை
ஆணவம்-காழ்ப்புணர்ச்சி-கோபம்
களவு-காமம்-பொறுப்பற்ற ஆசை
குன்றிய மனவளர்ச்சி-பணம்-சூழ்ச்சி
என்னென்னவோ காரணமாம்……
கொலைகள்…நடந்து போகின்றன
நாம் கடந்தும் போகிறோம்

வன்புணர்வுகள் பால் வேறுபாட்டால் வரும்
தொந்தரவுகள் ….
வயதும் வரம்பும் கடந்து
தொடரக்…….காண்கிறோம்…
செய்திகளாய் படித்து நாம் செல்ல
இதன் பரிமாண வளர்ச்சியோ
அப்பப்பா……..

குடும்பக் கட்டமைப்புகளோ… அதையும் சொல்லவேண்டியதில்லை…..
ஆதாயக்காதல்-ஆசைக்கு
மட்டும் காதல்- காதல்
இல்லையேல் சாதல் என்ற
வழிமுறைகள் –
டைம் பாஸ் காதல்கள்-இணையக்
காதலும் இணையாக் காதலும்-
வற்புறுத்தப்பட்ட
காதல்கள்- ஏற்க
மறுக்கப்படும் காதல்கள்-
மறுக்கப்படும்
கல்யாணங்கள்-
ஆதாயக்கல்யாணம்-அவசரக்
கல்யாணம்-அவசர
விவாகரதது-விசாவுக்கு
கல்யாணம்- சீதனத்துக்கு
கல்யாணம்- காதல் இல்லாத
கல்யாணம்- கல்யாணம் இல்லாத
காதல்- தன்னைத் தண்டிக்கும்
சிலர்- அதனைத் தூண்டும்
சிலர்…. அம்மம்மா………
யப்பப்பா………என்னே
நூற்றாண்டின்
பரிமாண வளர்ச்சி………

நம் வாழும் முறைகள் இன்றோ
ஆதரவற்றோர் இல்லங்களின்
வளர்ச்சியின் விதைகள்….

ஊழல் லஞ்சம் அரசியல்
சுரண்டல்
அரசே மக்களை சுரண்டல் ….
மாபாதகம் என்று மதங்களால்
ஒதுக்கப்பட்டவை பெரும்
வணிகங்களாய் நடந்து
கொள்ள…தெரிந்து போகிறோம் …

இவைகள் இல்லாமற் போயிருக்க வேண்டுமே…..
பிரார்த்தனைகள் பலன் தரும் என்றால் ………
வழிபாடுகள் பலன் தரும் என்றால் …….

வேடிக்கை……

பகுத்தறிவு கழன்று போனதால்
புதிய கடவுள்களின் தோற்றம்
புதிய குருக்கள் – புதுவரவு
பீடங்கள்

ஐயய்யோ…….
அவதாரப்புரளிகள்
என்னென்னவோ வித்தைகள்
இவற்றோடு
மூடநம்பிக்கைகள் சேர்ந்து
புதிய மதங்களாய் மெல்லத்
தலைப்பட

வேடிக்கை…
போலி என்றறிந்தும் காலில்
விழுவதற்கென்றொரு
கூட்டம்…..
நம் எண்ணங்களையே மற்றவர்
வாய்கேட்க நாம்
செவிமடுக்கிறோம்….
இது புரியாமல் இதற்கு
கணனி-இணையம்-தொடர்பாடல்களும்
வேறு துணைபோக
அரசில் உள்ளவர்களும்
வணிகரும்
ஆன்மீகம் என்ற போர்வையில்
ஆதாயம் பார்க்க……

வளர்ந்து நிற்கிறோமா….நாம்?
இத்தனையாம் நூற்றாண்டா
இது..?

சமூக அபிவிருத்தி
மனித மனங்களாய் அன்றி
சீமெந்துக்
கட்டமைப்புகளாயும்
வானுயர் கோபுரங்களாயும்
கைப்பேசிகளாயும்
சாதனங்களாயும் வெறும்
புகைப்படங்களாயும்
மட்டுமே
உருவாகியுள்தோ……..?

ஆட்சிகள் வளங்களை சுரண்ட
ஆன்மீகம் என்று
சொல்லிக்கொள்பவை
மனித மனங்களாய் பார்த்து
சுரண்ட  அபாரம்……….

இதற்கு மேல் என் மதம் தான்
பெரிது உன் மதம் தான்
பெரிது
என்று உரக்கவும் கூற…
ஊமையாகவும்சொல்ல…மனிதம்….

இன்று……

புத்தகங்கள் சில
கைகளில்…..ஏந்தி
இன்னோர் மதத்தல வாசலில்
நின்று
எமது மதம் தான் சிறந்தது
என்று
போதிக்க ஒரு கூட்டம்….
இன்னலில் இருப்போருக்கு
உதவி
என்று செய்து மெல்ல
எண்ணங்களை சலவை செய்து மதம்
மாற்றும் சிலர்…
காதல் என்ற பேரில் தொடரும்
வற்புறுத்தலும் மதமாற்ற
கல்யாணமும் நடத்தும்
இன்னொரு..கூட்டம்……
என் மதம் தான் பெரிது என்
கடவுள்
தான் பெரிது என்று காணும்
இடமெல்லாம் தலங்கள்
சிலைகளும் அமைக்க வேறொரு
கூட்டம்…
அவற்றுக்கு பொருளாய்
இறைக்க
மேலும் பலர்……
எல்லாம் சரி இதுவெல்லாம்
சரியென்றால்
…..சொல்லுங்களேன்
மதங்கள் எதைத்தான்
…சொல்கின்றன?
சொல்லுங்களேன்……எமக்கு
சொல்லுங்களேன்……

கடைசியாக
இத்துன்பங்களின்
தீர்வுகள்
என்னவென்று
பார்த்துச் சொல்வோமா…..?

கர்மவினை-தலை விதிப்
பிரகாரம்
முன்வினைப்பயன்-
நீ இப்படி பிறந்து விட்டாய்
–
நீ பெண் …நீ ஆண்பிள்ளை-
ஆண்டவன் இப்படித் தான்
தீர்மானித்துள்ளான் போல-
எல்லாம் அதிர்ஷ்டம்-
எல்லாம் துரதிர்ஷ்டம்-
மதங்கள் இல்லையென்றால் உலக
தர்மம் அழிந்து போகும்…..
அழிவுகளைக் கட்டுப்படுத்த
முடியாது
மக்களை கட்டுப்படுத்த
முடியாது…..
பிழைகள் அநியாயங்களை
கட்டுப்படுத்த முடியாது…….
ஏராளம் ஏராளம்…..

மனசாட்சி மறந்து போகும்
மனிதம்
மனமே ஆலயம் இதை மறக்கும்
உலகம்
மதங்கள் இன்னமும்
வேண்டும்…?

S.ஷோபனா

P.S: நான் நாத்திகம் பேசவில்லை

Add Comment