உடலில் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் #kidney ஒன்று. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலில் நீர் மேலாண்மையை நிர்வாகம் செய்வது சிறுநீரகம் தான். இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானது.நாம் தினமும் வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவை அனைத்தும் நம் உடலுக்கு சத்துக்களை கொடுத்துவிடுகிறது. ஆனால், அதிலும் நச்சுக்கள் இருக்கிறதென்பதை மறுக்க முடியாது. நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் #water குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கற்கள் #stone உருவாகும் அபாயம் இருக்கிறது. சிறுநீரக கற்களால் காய்ச்சல் #Fever, குமட்டல், அடிவயிற்றில் வலி #pain போன்றவை ஏற்படும். பெரும்பாலும் சிறுநீரக கற்களை அறுவைச் சிகிச்சையால் மட்டுமே நீக்க முடியும். இயற்கை முறையில் சிறுநீரக கற்களை எப்படி கரைப்பதென்பதை பார்ப்போம்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
தினமும் ஏழு -எட்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டுமானால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். செரிமானம் சீராக இருக்கவும் உணவின் மூலம் கிடைக்கும் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை எளிமையாக கரைக்கவும் தண்ணீர் உதவும். சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய கற்களை வெளியேற்றவும் தண்ணீர் உதவுகிறது.
எலுமிச்சை மற்றும் ஒலிவ் ஒயில்
எலுமிச்சை #lemon சாறு மற்றும் ஒலிவ் #olive எண்ணெய் இரண்டையும் கலந்து தினமும் குடித்து வரலாம். எலுமிச்சை சாறு கற்களை உடைக்க செய்யும். ஒலிவ் எண்ணெய் வலியில்லாமல் கற்களை வெளியேற்றச் செய்கிறது.
அப்பிள் சிடர் வினிகர்
சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய கற்களை சின்னச் சின்ன துகள்களாக உடைக்க வல்லது அப்பிள் சிடர் வினிகர். இரண்டு மேசைக்கரண்டி அப்பிள் சிடர் வினிகரை வெந்நீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்களை கரைத்து விடுகிறது.
மாதுளை #Pomegranate
மாதுளையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆண்டிஆக்சிடண்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இயற்கை ஆரோக்கிய பானமான மாதுளை சாறு சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.
சோளம் #Corn
சோளத்தில் நார் போன்று இருப்பதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளும். சிறுநீரை பெருக்கி, வலியில்லாமல் கற்களை வெளியேற்றும்.
#healthyTips #urine






