நீங்கள் முகநூலில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை இனி அதுவே உங்களுக்கு தெரிவிக்கும். காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் முகநூல் மட்டுமே ஒரே வேலை என்று திரியும் நபர்கள் தற்போது ஏராளம். மக்கள் இப்போது முகநூலில் செலவிடும் நேரம் மிகவும் அதிகமாகிவிட்டது.
இதற்காக ”முகநூலில் உங்கள் நேரம்” என பொருள்படும் வகையில் ‘டைம் ஒன் யுவர் பேஸ்புக்’ என்ற வசதி இன்னும் சில நாட்களில் கொண்டு வரப்பட உள்ளது.இந்த வசதி நீங்கள் முகநூலில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்று கணக்கிடும். அதேபோல்,ஒரு வாரத்தில் எவ்வளவு நேரம் முகநூல் பார்க்கிறீர்கள் என்றும் கணக்கிடும்.மேலும்,ஒரு நாளைக்கு எவ்வளவு லைக் செய்கிறீர்கள், எவ்வளவு வீடியோ பார்க்கிறீர்கள் என்று கணக்கிட்டு இந்த வசதி மூலம் உங்களுக்கு சொல்லும்.
ஏன் செய்கிறது
நாம் மிகவும் அதிக அளவு முகநூலுக்கு அடிமை ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.அதே சமயம், முகநூலில் நாம் செலவிடும் நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வசதி வருகிறது. நாம் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பதை முகநூல் நமக்கு எச்சரிக்கை போல தெரிவித்துக் கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது .
அதேபோல்,முகநூலில் சமீப காலமாக சில பிரச்சனைகள் அவ்வப்போது உருவாகிய வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனைகளை போக்குவதற்காக பிரச்சனைகளை கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தானாக, ஒரு பிரச்சனை உருவாவதற்கு முன்பு அதைக் கண்டறியும். மக்களுக்கு அந்த பிரச்சனை உருவாகும் முன் அதை சரி செய்யும் முகமாகவே இந்த குழு உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
அண்மைக்காலமாக பெரிய அளவில் தகவல் திருட்டு பிரச்சனையால், கடந்த சில மாதங்களாக நிறைய பயனாளிகள்முகநூல் பாவனையிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக தற்போது முகநூல் நிறைய புது வசதிகளை உருவாக்கி வருகிறது.






