பிரிப்பதும் சேர்ப்பதும்

தையற்காரர் ஒருவர் தனது கடையில் துணிகளை தைத்துக் கொண்டு இருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்து அதை அழகிய கத்தரிக்கோலால் சில துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்தரிக்கோலை காலருகே போட்டு விட்டு ஊசியை கொண்டு துணியைத் தைக்கலானார். துணியை தைைத்து முடித்ததும் அவ் ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார்.

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அவர் மகன் அவரிடம் “அப்பா! கத்தரிக்கோல் விலை உயர்ந்து, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது, மலிவானது ஆனால் அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்????” என்று கேட்டான்.

“நீ சொல்வது உண்மை தான், கத்தரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பது! ஆனால் ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல” என்றார் தையற்காரர்.

Add Comment