`நாளொன்றுக்கு 10 தேக்கரண்டி சீனிக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!’ – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

நாம் சாப்பிடும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள்…  அனைத்திலும் இயற்கையாகவே சீனி (இனிப்பு)இருக்கிறது. இவை தவிர, நாம் அருந்தும் தேநீர் , ஜூஸ் போன்ற பானங்களில் நேரடியாகவும் சீனியைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒருவரின் இயல்பான அளவுக்கு மேல் ரத்தத்தில் சீனி சேர்வதால் முதலில் உடல் எடை அதிகரிக்கும். இதனால்,  நீரிழிவு நோய், இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம்… என பல தொற்றா நோய்கள் ஏற்படவும் அது காரணமாகிவிடும். இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் ஆபத்தும் சேர்ந்திருக்கிறது… `புற்றுநோய்’. `ரத்தத்தில் சீனியின் அளவு அதிகமானால், புற்றுநோய் ஏற்படும்’ என்று அண்மையில் எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சீனியின் அளவு அதிகரிக்காமல் நம்மை காத்துக்கொள்ள சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி, `ஒருவர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக பத்து தேக்கரண்டி சீனிக்கு மேல் உட்கொள்ளக் கூடாது’ என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

Add Comment