சமூக வலைபக்கமான டுவிட்டரில் உறுப்பினர்கள் பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக டுவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அநேகமானோரால் பயன்படுத்தப்படும் டுவிட்டர் வலைப்பக்கத்தினை மேம்படுத்தும் பொருட்டு பல புதிய ஆய்வுகள் சமீபத்தில்மேற்கொள்ளப்பட்டது. அதில் தற்போதைய கருத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை தொடர்பில் பலருக்கு திருப்தியின்மை காணப்படுவதாக தகவல் வெளியிட்டது.
இதனையடுத்து பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 280 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போது இம் முயற்சி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டுவிட்டரில் சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் இது பலரிடமும் வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜப்பான், சீனா, கொரிய மொழி எழுத்து வடிவத்திற்கு பழைய வரம்பே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.






