கைத்தொலைபேசி ( Mobile) என்பது உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களிடம் தொடர்பு கொள்ள கைத்தொலைபேசி (Mobile) என்பது மிகவும் உபயோகமான தொடர்பாடல் சாதனமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில சமயங்களில் தொல்லைப்படுத்தும் சாதனமாகவும் இது மாறி விடுகின்றது.
அடிக்கடி நமக்கு வரும் தொல்லைப்படுத்தும் விளம்பர அழைப்புகள், டெலி மார்க்கெட் அழைப்புகள் மற்றும் சில நேரங்களில் வரும் மிரட்டல் அழைப்புகள் ஆகியவை நமக்கு பெரும் தொந்தரவாக இருக்கும். இவ்வாறான நமக்கு வரும் வேண்டாத அழைப்புகளை தவிர்த்துவிட நமக்கு சில செயலிகள் உதவுகின்றன. இதற்கெனவே மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் அவற்றில் சிறந்த செயலிகளை தற்போது பார்ப்போம்.
ட்ரூ காலர் (True Caller)
வேண்டாத அழைப்புகளை தவிர்க்க உதவும் செயலிகளில் முதன்மையானதும் பெரும்பாலானோர் பயன்படுத்துவதும் இதுதான். அழைப்பவர்கள் யார், எங்கிருந்து அழைக்கின்றனர் ஆகிய விபரங்களுடன் அவர்கள் இனியும் தொடராமல் இருக்க பிளாக் (Block) செய்யும் வசதியும் உண்டு.
மேலும் தவிர்க்க விரும்பும் எண்களை ஸ்பேம் (Spam) செய்தும் பிளாக் (Block) செய்து விடலாம். ஆனால் இந்த செயலி இயங்குவதற்கு இண்டர்நெட் கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி தன்னுடைய சர்வதேச நெட்வொர்க்கை (International Network)பயன்படுத்தி அழைப்பவர் எங்கிருந்தாலும் எந்த பெயரில் இருந்தாலும் நமக்கு அந்த நபருடைய பெயர் மற்றும் இடத்தை கண்டுபிடித்து கொடுத்துவிடும். சிலசமயம் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்தையும் பெறலாம்.

கால் பிளாக்கர் (Call Blocker)
நமக்கு தெரியாத தேவையில்லாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் (SMS) வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் (Block) செய்துவிடும். மேலும் டெலிமார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு. மேலும் ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக்கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

ஹூஸ்கால் (Whoscall)
Whoscall மூலம் உங்கள் தொடர்பு பட்டியலில் இல்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) உடனடியாக அடையாளம் காணலாம். ஸ்பேம், ஸ்கேம்கள், டெலிமார்க்கெட்டர்ஸ், ரோபோக்கால்ஸ் போன்ற பல தேவையற்ற எண்கள் மற்றும் நூல்களைத் தடுக்க இந்த செயலி உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஷோகார்ட் என்ற ஆப்சனில் உங்களுக்கு தேவையான பிசினஸ் எண்களை சேமித்து வைத்து கொள்ளலாம்.







