ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 – 6 லீட்டர் இரத்தம் ஓடுகிறது. இரத்த தானம் செய்பவர்கள் ஒரு நேரத்தில் 200 – 300மிலி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தம், இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். திடகாத்திரமான ஒருவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்வதற்கான தகுதிகள்:
வயது 17 முதல் 55 வரையானவர்கள் தானம் செய்யலாம்.
எடையானது சராசரியாக 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
எயிட்ஸ், மலேரியா, காமாலை போன்ற நோய்கள் இல்லாதவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்வதன் மூலம் நாமடையும் பயன்கள்:-
1) நமது இரத்தப்பிரிவை அறிந்துகொள்ள முடிகிறது.
2) உடலில் ஏதேனும் நோய்கள் இருப்பின் அவை கண்டறியப்படுகின்றன.
3) இரத்த கொதிப்பு நோய் இரத்த தானம் செய்பவர்களுக்கு வருவது மிக மிகக் குறைவு.
4) உடம்பிலுள்ள இரத்த அணுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கையாகவே அழிக்கப்பட்டு, மீண்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.







