புடவை அணியும் முறை

அழகான ஆடைகளை அணிவதென்றால் பெண்களுக்கு கொள்ளை விருப்பம். அதிலும் விதவிதமான புடவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.ஆடைகள் உங்கள் அழகைக் கூட்டிக்காட்ட வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது.

ஐந்தடி அல்லது அதற்கு கீழ் உள்ள பெண்கள் , பெரிய பூக்கள் போட்ட புடவைகளை அணிவது அழகைத் தராது. சிறிய கரைகளைக் கொண்ட பூக்கள் இல்லா வண்ணப் புடவைகள் அழகைத் தரும்.

உயரம் குறைவான பெண்கள் அதிக நகைகள் அணிவது அழகாக இருக்காது. சிறிய காதணிகள், மெல்லிய சங்கிலிகள் அணிவது அழகை எடுத்துக்காட்டும்.

உயரமான பெண்கள் அச்சிட்ட, பெரிய கரை புடவைகளை அணிந்து, அதற்கு பொருத்தமான இரவிக்கைகளைத் தேர்வு செய்வது அழகு.

நீளமான கழுத்துடையவர்கள் நீண்ட காதணிகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.

Add Comment