அரச உத்தியோகம் – கவியாக்கம்: ஜெயன்

உழைக்காமல் வாழ்வதற்கு

சும்மா இருந்து சம்பளம் எடுப்பதற்கு

சொல்லிக்கொடுக்கிறார்கள்…

அன்பு, நீதி, நேர்மை எல்லாம்

பழைய பாடம்

 

ஒருசிலருக்கு கிட்டும்

ஒப்பற்ற உத்தியோகத்திற்கு

ஊரே போட்டிபோடுகிறது..

படும் பாடுகளும்

பாடத்திட்டங்களும்

அதற்காகத்தான்

 

தன்னம்பிக்கையற்று

தனக்கென்று காலுமில்லாமல்

முன்னே முற்றம் கூட்டுவதற்கும்

சம்பளம் கொடுக்கும் பரம்பரை

அரச உத்தியோகம் தேடுகிறது.

கவியாக்கம்: ஜெயன், கொக்குவில், யாழ்ப்பாணம்.

Add Comment