சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) – பிரியங்கா சௌத்ரி (Priyanka Chaudhary) தம்பதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாமில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெதர்லாந்து நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கிரேஸியா என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தையின் படங்களை டுவிட்டரில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் ரெய்னா.

Suresh Raina with his daughter Gracia at hospital

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். நெதர்லாந்தில் வேலை செய்து வரும் பிரியங்கா கருவுற்றார். ஐபிஎல் போட்டியில், குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் ரெய்னா, மனைவியின் பிரசவத்தின்போது அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக சிலநாட்களுக்கு முன் நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

ஐ.பி.எல். போட்டியில் கடந்த 8 சீசன்களில் ஒரு ஆட்டத்தைக்கூட தவறவிடாத ரெய்னா, இந்த சீசனில் முதல் முறையாக பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.

Raina 1st baby Gracia born in Netherlands

Indian cricketer becomes as father on last Sunday

Add Comment