அப்பிள் டி.வியில் இனி வீ.எல்.சீ(VLC) பிளேயர்

பலதுறைகளில் பங்களித்துக் கொண்டிருக்கும் வீடியோ பிளேயரான வி.எல்.சி (VLC)பிளேயர், தற்போது அப்பிள் டி.வி(Apple TV) யில் வரவுள்ளது. இதுவரை கணினி, ஐபோன் மற்றும் ஐபேடுகளில் கண்டு வந்த இந்த செயலியானது தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு அப்பிள் தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் வசதிகள் புதியனவாக இடம்பெற்றுள்ளன:

  • அனைத்து வகையான பைல்களையும் இதில் இயக்கலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆடியோ ட்ரேக்குகளை இதில் இயக்கலாம்.
  • இணைய ரேடியோ சேவைகளுக்கும் ஆதரவளிக்கும்.
  • இது முற்றிலும் இலவசம் மற்றும் ஓப்பன் சோர்ஸ்(Open Source) தன்மை கொண்டது.
  • இதன் மூலம் இணையத்தின் URL-களை நேரடியாகவே பேஸ்ட் செய்து பிடித்த பாடல்களை கேட்டு மகிழலாம்.
  • அப்பிள் டீ.வியில் உங்கள் இணையத்திலிருந்தோ அல்லது நேரடியாகவோ பைல்களை அனுப்பிக் கொள்ளாலாம்.மேலும் UPnP, Windows shares (SMB), FTP and Plex servers போன்றவற்றின் பைல்களுக்கும் ஆதரவளிக்கும். மேலும் இவற்றிலிருந்து நேரடியாகவே சப் டைட்டில்களையும் (Subtitles) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதல் முறையாக வீ.எல்.சீ, OpenSubtitles.org யுடன் ஒருகிங்ணைகின்றது. இதன் மூலம் பயனாளர்கள் பின்னணி இசையின் போது காணாமல் போன சப்டைட்டில்களை(Subtitle) பெற முடியும். இந்த சப்டைட்டில்கள் அரபிக் மற்றும் ஹூப்று போன்ற சிக்கலான மொழிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. கடந்த நவம்பரில் இந்த நுட்பம் பீட்டா (Beta) பரிசோதனையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இதனை வெற்றிகரமாக வெளியிட தயாராக்கி வருகிறது.

சாதரணமான கணினியில் வீ.எல்.சீ மீடியா பிளேயர்களை பயன்படுத்தும் போது டிராக் மற்றும் டிராப் செய்து கொள்ளலாம். தொலைக்காட்சியில் பயனாளர்களின் வசதிக்கிணங்க மேலும் டிராப் பாக்ஸ் (DropBox), ஒன் டிரைவ் (One Drive) போன்றவற்றையும் நுழைக்கும் முயற்சியில் வீடியோ லேன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

வீ.எல்.சீ பிளேயரின் உதவி கொண்டு பல கல்வி சம்பந்தமான உள்ளடக்கங்கள் மற்றும் பல பேச்சுவார்த்தை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம். மேலும் இது வீடியோ பின்னணி செயல்பாடுகளில் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்தர்பம் இதுவேயாகும். இந்த அறிமுகம் பயனர்களிடையே அதிக வரவேற்பை பெற்றால் தொடந்து இதுபோன்ற பல செயலிகளை அப்பிள் டி.வீகளில் காணலாம்.

Add Comment