அரை நிர்வாணமாக காட்சியளித்த கிரிஸ் கெயில்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் பெண் நிருபரிடம் அநாகரிகமாக பேசிய கிரிஸ் கெயில் மீது மேலும் ஒருபெண் ஊழியர் தன் முன் அரைநிர்வாணமாக நின்றதாக புகார் கொடுத்துள்ளார்.

உங்கள் கண்களைப் பார்க்க வந்துள்ளேன். அவை அருமையாக உள்ளன. மேலும் அந்த பெண் நிருபரை தண்ணி அடிக்க அழைத்தது போன்ற செயலுக்காக பலரது கண்டனங்களையும், அபராதத்தையும் பெற்றார் கெயில்.

இந்நிலையில் சென்ற வருடம் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது பெண் ஊழியர் முன்பு மிகவும் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதாக திடிக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் பணியில் இருந்த ஆஸ்திரேலிய பெண் ஊழியர் ஒருவர் நாள் முழுக்க சாப்பிடாததால் வீரர்களின் ஓய்வு அறைக்கு சாண்ட்விச் சாப்பிட சென்றுள்ளார்.

அந்த அறையில் இடுப்புக்கு கீழே துண்டால் மறைத்திருந்த கெயில் சாண்ட்விச் சாப்பிடவந்த பெண் ஊழியரை பார்த்ததும், இதற்காகத்தானே வந்தீர்கள் என்று, துண்டை கீழே போட்டு ஆணுறுப்பை ஓரளவு காண்பித்தபடி நின்றுள்ளார். அந்த பெண் ஊழியர் இது குறித்து அந்த அணியின் மேலாளர் ரிச்சர்ட்சனிடம் புகார் தெரிவித்தார்.

ஆனால் அந்த அணி கெயிலின் பெயரை வெளியிடாமல் மறைத்தது. பெண் ஊழியர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று ரிச்சர்ட்சன் வீரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார், இத்துடன் இந்த விவகாரத்தை அவர்கள் முடித்துள்ளனர்.

அன்றே கெயில் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அவர் வரம்பு மீறிஇருக்க மாட்டார். தற்போது கெயில் பெண் நிருபரிடம் நடந்த விதத்தை தொடந்து அந்த பெண் ஊழியர் அன்று தனக்கு நேர்ந்ததை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கிரிஸ் கெயிலின் மீது இந்த அடுத்தடுத்த பெண்கள் தொடர்பான புகார்கள் கிரிக்கெட் உலகை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Add Comment