எச்.பி. 25 – 35 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்க முடிவு

உலகில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்.பி. என அழைக்கப்படும் ஹெவ்லட் பெக்கார்ட் நிறுவனம் 25,000 – 30000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. தனிநபர் கணனிகள் , பிரிண்டர்கள் உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக திகழ்கின்றது.

சீனாவின் லெனோவா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தற்போது எச்.பி. நிறுவனத்திற்கு கடும் போட்டியாக உள்ளன. இதனால் 2012–ம் ஆண்டில் இருந்து எச்.பி. நிறுவனம் சரிவுகளை சந்தித்து வருகிறது. இதில் இருந்து மீள 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக எச்.பி. நிறுவனம் அறிவித்துள்ளது.

எச்.பி நிறுவனம் இரு பொது பங்கு நிறுவனங்களாக பிரியவுள்ளது. இதில் ஒன்று எச்.பி. எண்டர்பிரைசஸ் என அழைக்கப்படவுள்ளது. இது சைபர் பாதுகாப்பு , கிளவுட் தொழில்நுட்பம் ஆகிய வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் இப்பணி நீக்கங்கள் இந்நிறுவனத்திலேயே இடம்பெறவுள்ளன. இப்பணி நீக்க செயற்பாடானது புதிதாக உருவாகும் நிறுவனத்தை மேலும் போட்டித் தன்மைமிக்கதாக மாற்றும் என எச்.பி.இன் பிரதம நிறைவேற்று அதிகாரி விட்மேன் கருதுகின்றார்.

அவர் 2011 இல் பதவியேற்ற நாள் முதல் 55,000 இற்கும் அதிகமான பணி நீக்கங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.

Add Comment