உயர்ந்து செல்லும் கடல் மட்டம்;தடுக்க வழியில்லை- நாசா

உலகில் மிக முக்கியமான சூற்றுச்சூழல் பிரச்சினையாக இருக்கும் பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்து வரும் 100 அல்லது 200 வருடங்களில் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா வின் ஆய்வு ஒன்றுதெரிவிக்கின்றது. கடல் மட்டஉயர்வு தடுக்க முடியாத ஒன்றென்றும் அதேவேளை,அது எவ்வளவு விரைவாக இடம்பெறும் என்பதையும் அறுதியிட்டு கூறமுடியாது எனவும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

NASA-Ames-Research-Center

இது குறித்து இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கும் நாசாவை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவ் நேர்ரம் கூறுவதாவது;

” கடல் வெப்ப அதிகரிப்பு மற்றும் பனிப்பாறை உருகுதல் போன்றவற்றால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இது தொடரும் பட்சத்தில் கடல் மட்டத்தின் அளவு மூன்று அல்லது நான்கு அடிக்கும் மேலாக உயரும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால்,இது எப்பொழுது நிகழும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது”.

பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கியநாடு அரசுகளின் குழு கடல் மட்ட உயர்வு குறித்த ஆய்வினை கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடத்தியபோது,இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என கணிப்பிட்டிருந்தது.

கிரீன்லாந்து பகுதியில் வருடமொன்றுக்கு 300கிகாடன் பனிப்பாறை உருகி கடலில் கலக்கும் அதேவேளை ,அந்தார்டிக் பகுதியில் 118கிகாடன் பனிப்பாறை உருகி வருகிறது.இதனால் 1992ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய கடல் மட்ட உயர்வு மூன்று அங்குலமாகவும் சில பகுதிகளில் ஒன்பது அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை கடல் மட்ட உயர்வு குறித்து ஆராயும் மற்றொரு நாசா விஞ்ஞானியான டொம் வெக்னர் கூறுகையில் ;
‘உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையான கடல் மட்ட உயர்வினை பார்க்கும்போது தற்போது காணப்படும் வேகத்திலேயே பனிப்பாறை உருகுமானால் இன்னும் 100 அல்லது 200 வருடங்களில் கடல் மட்ட அளவு 10 அடி உயரும்’ என்றார்.

Add Comment