இன்றைய தொழில்நுட்ப உலகில் எல்லாமே வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாமும் எம்மையறியாமல் மாறிக்கொண்டிருக்கின்றோம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறும் என்பது உண்மை தானோ!
சாதாரண கைப்பேசிப் பாவனை மலையேறி தொடுதிரை கைப்பேசி பாவனை வந்துவிட்டது. தொடுதிரை கைப்பேசிகளின் வசதிகளோ ஏராளம். எமது கன்னி முயற்சியாக தமிழை இன்றைய தொழில்நுட்ப உலகிற்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றோம். எமது முயற்சிப் பயணத்தில் உங்களையும் அன்பாக இணைய அழைக்கிறோம்.
ஆம் நாம் மாதம் ஒருமுறை வருகின்ற வகையில் ஒரு துளி என்ற மின்னிதழ் சஞ்சிகையை (e-Magazine) வெளியிடுகிறோம்.
இவ் சஞ்சிகையை (e-Magazine) பார்வையிட http://emagazine.oruthuli.com என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள் அல்லது உங்கள் அன்றொஇட் (Android Smartphone) கைபேசியில் Oru Thuli – eMagazine என்ற அப்பிளிகேசனை தரவிறக்கம் செய்யுங்கள்.
இவ் ஒரு துளி சஞ்சிகை ஆக்கங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் படைப்புக்கள், கருத்துக்களை எமக்கு editor@oruthuli.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.
இக்கன்னிப் பயணத்திற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல. மேலும் உங்கள் உதவியோடு எமது பயணம் தொடரும்…
வாழும் போதே அறிந்து
வாழ்வு இதுவென உணர்ந்து
வாழ்ந்திடு.
http://emagazine.oruthuli.com
https://play.google.com/store/apps/details?id=com.appz.oruthuli.emagazine






