இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வருடத்தின் அதி சிறந்த வீரர் விருதை ஏஞ்சலோ மெத்தியூஸ் வென்றெடுத்த அதேவேளை மக்கள் அபிமான வீரர் விருதை குமார் சங்கக்கார மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார்.
டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்தரமுல்லை வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நேற்று இரவு கோலாகலமாக நடத்தப்பட்டது.
இதில் மெத்தியூஸ் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட வீரர் விருதையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான விருதையும் வென்றெடுத்தார்.
லசித் மாலிங்க அதிசிறந்த சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் பந்துவீச்சாளருக்கான விருகளை வென்றெடுத்தார்.
மேலும் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் விருதை மெத்தியூஸ் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இணைந்து பெற்றனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிசிறந்த பந்து வீச்சாளருக்கான விருகை ரங்கன ஹேரத் பெற்றார்.
இதேவேளை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து சகலத்துறை வீரர்களான விருதை திசர பெரேரா மற்றும் குசேல் பெரேரா ஆகியோர் வென்றெடுத்தனர். மேலும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதை நிரோசன் டிக்வெல வென்றெடுத்தார்.








