ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊரு கேட்குமே
வேர் பேசினால் யாரு கேட்பது?
விதை தாண்டி வந்த இலைகள்
விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த காதல்
சுட்டால் கூட வேகாது
******
தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்
தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்.
பெரும்பாலும்
இன்றைய விருப்பத்திற்கும், வெறுப்பதற்கும்
அவரவர்களின் தேவையே
முக்கியமான காரணமாக உள்ளது






