பழங்களிலுள்ள சத்துகள்

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. தவிர விற்றமின்கள் ஏ, பி, சி உள்ளன. இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.

 

மாம்பழம்

விற்றமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. விற்றமின் பி, சி, மற்றும் இரும்பு, கல்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மாம்பழத்தில் விற்றமின் ஏ சத்து அதிகம் உள்ளது. விற்றமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு அல்லது மாலைக்கண் நோய் போன்றன ஏற்படும். மாம்பழம் உண்பதன் மூலம் இக்குறைபாட்டை தவிர்த்துக்கொள்ளலாம்.

 

அண்ணாசிப் பழம்

இரும்புச் சத்து, விற்றமின்கள் ஏ, பி, சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கல்சியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

 

ஆரஞ்சுப் பழம்

விற்றமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. விற்றமின் சி, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. ஆரஞ்சுப் பழம் உண்பதன் மூலம் பார்வைக் கோளாறு குறைபாட்டை தவிர்த்துக்கொள்ளலாம்.

 

பப்பாளிப் பழம்

விற்றமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் விற்றமின் ஏ சத்து அதிகம்.

 

நெல்லிக்கனி

விற்றமின் சி 600 மி.கி. கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் விற்றமின்கள் ஏ, பி சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் விற்றமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

 

கொய்யாப்பழம்

விற்றமின் சி 212 மி.கி. உள்ளது. பி விற்றமின், கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.

 

சாத்துக்குடி

விற்றமின் சி 45 மி.கி. உள்ளது. கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. விற்றமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.

 

எலுமிச்சை

கல்சியம் 70 மி.கி. விற்றமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் விற்றமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

 

கறுப்பு திராட்சை

விற்றமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கல்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

 

பச்சை திராட்சை

விற்றமின் சி, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அத்தோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.

 

பேரீச்சம் பழம்

இரும்புச் சத்து 7.3 மி.கி., கல்சியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் விற்றமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

 

ஆப்பிள்

விற்றமின்கள் ஏ, சி, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.

 

தர்பூசணி

இரும்புச் சத்து 7.9 கிராம், கல்சியம், பாஸ்பரஸ் மற்றும் விற்றமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.

 

புளியம் பழம்

இரும்பு 17 மி.கி. கல்சியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் விற்றமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.

 

சீத்தாப் பழம்

பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் விற்றமின்கள் பி, சி யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

 

மாதுளம் பழம்

பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கல்சியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், விற்றமின்கள் பி, சி சிறிதளவும் உள்ளன. கல்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.

Add Comment