L.G. (எல்.ஜி.) நிறுவனமானது தனது வளைந்த திரையுடன் கூடிய G Flex (ஜி பிளெக்ஸ்) ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்த L.G. (எல்.ஜி.) தற்போது இவ்வளையக் கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது .
L.G. (எல்.ஜி.) வெளியிட்டுள்ள தகவலின் படி G Flex (ஜி பிளெக்ஸ்) ஸ்மார்ட் போனானது நெகிழ்ச்சியான 6 அங்குல OLED (ஓ.எல்.ஈ.டி.) திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் நிறை 177g என்பதுடன் 2.26GHz quad-core Snapdragon 800 Processor (புரசசர்).
இதுதவிர 13-megapixel camera, 2GBரெம் போன்ற வசதிகளை இது கொண்டுள்ளது.
இவற்றை எல்லாம் விட பல புதுவசதிகளை G Flex (ஜி பிளெக்ஸ்) கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மல்டிடாஸ்கிங்’ செயற்பாடுகளுக்காக திரையை இரண்டாக பிரிக்கக்கூடிய ‘டுவல் விண்டோஸ்’ வசதி, வெவ்வேறு விதமாக திரையை அண்லொக் செய்யும் ‘சுவிங் லொக் ஸ்கிரீன்’ வசதி, போனின் பின்புறத்தில் விழும் சிறு கீறல்களை சில
நிமிடங்களில் தானாக போக்கிக்கொள்ளும் “self-healing” தொழில்நுட்ப வசதிகள் என்பன இதில் அடங்கும்.
இவ்வளையக் கூடிய G Flex ஸ்மார்ட் போன் எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வருமென L.G. (எல்.ஜி.) அறிவிக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் L.G. (எல்.ஜி.)யின் கைவரிசையை.








