சிரிக்க???

சுப்பு: எதுக்குப்பா என்ன அடிக்க வர்றீங்க?
அப்பா : உன்ன விட சின்ன வயசு பையனை அடிச்சிட்ட. அது தப்பு தானே…
சுப்பு : நான் கூட உங்கள விட சின்ன பையன் தான். என்ன அடிக்கிறது தப்பில்லையா?
அப்பா :????

டீச்சர்: எல்லோரும் பாக்டீரியா படத்தை வரைஞ்சிட்டீங்களா? சுப்பு, நீ வரைஞ்சதைக் கொண்டு வா…
சுப்பு: இந்தாங்க டீச்சர், தத்ரூபமா வரைஞ்சிருக்கேன் பாருங்க.
டீச்சர்: என்ன இது, பேப்பர்ல ஒண்ணுமே இல்லையே…?
சுப்பு: வெறும் கண்ணால பார்த்தா எப்படி தெரியும்? மைக்ரோஸ்கோப் வச்சி பாருங்க டீச்சர்!
டீச்சர்: ????

சுப்பு: அப்பா…நான் வெற்றியின் முதல் படியில நிக்கிறேன்.
அப்பா: வெரிகுட். எக்ஸாம்ல எல்லா பாடத்துலயும் பாஸ் பண்ணிட்டியா?
சுப்பு: இல்லப்பா..நீங்க தானே சொன்னீங்க, தோல்விதான் வெற்றிக்கு முதல் படின்னு!
அப்பா:????

அப்பா: நல்லா படிச்சா தான்டா வீடு, வாசல்னு வசதியா வாழ முடியும்.
சுப்பு (விரக்தியாக): என்னதான் மனுசன் வீடு, வாசல், கார்னு சம்பாதிச்சாலும், ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும். இதுதான் வாழ்க்கை!
அப்பா:????

4 Comments

  1. shanki 16/10/2013
  2. shankar 16/10/2013
  3. G.Periyasamy 20/01/2014
  4. Thilina Sampath 01/12/2018

Add Comment