கூகுள் நிறுவனமானது 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய புத்தம் புதிய Nexus 7 டேப்லட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் திரையானது 1920 x 1200 Pixel Resolution உடையதாக காணப்படுகின்றது.
இதில் Quad Core Qualcomm Snapdragon S4 Pro Processor காணப்படுவதுடன், பிரதான நினைவகமாக 2GB RAM தரப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி கூகுளின் அண்ட்ரோய்ட் 4.3 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் டெப்லட் என்ற பெருமையையும் இது பெறுகின்றது. இந்த டேப்லட்டில் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியன இணைக்கப்பட்டுள்ளன.அத்துடன் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.

அப்பிளின் ஐபேட் மினியுடன் போட்டியிடும் நோக்குடனே இதனை வெளியிட்டுள்ளதாக தெரிகின்றது.







