நல்ல நாள் நல்ல நேரம் பார்ப்பதெல்லாம் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு மட்டுமல்ல் நாம் செய்யும் எக்காரியத்திற்கும் நாள்பார்த்து செய்வோமானால் அந்த விடயம் வெற்றிகரமாக முடியும்.
இயந்திர மயமாகிவிட்ட இன்றைய மனித வாழ்வில் இரவு பகல் என்று பார்க்காது அனைவரும் கடினமாக உழைக்கின்ற போதும் அனேகமானோருக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வேதன அதிகரிப்போ பதவி உயர்வோ கிடைப்பதில்லை.
இவ்வாறானவர்களுக்காகவே ‘லண்டன் ஸ்கூல் ஒப் எக்னோமிக்ஸ்’ அண்மையில் ஆய்வொன்றை செய்து முடிவை வெளிட்டுள்ளது. அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் வேதன அதிகரிப்பு தொடர்பில் உயரதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு சிறந்த நாள் புதன்கிழமை என்றும் வாரத்தின் நடுப்பகுதி என்பதால் உயரதிகாரிகள் மற்றும் முதலாளிகள் பதற்றம் குறைந்து இயல்பு நிலையில் காணப்படுவதால் உங்களது வேண்டுகோளுக்கு நன்மை பயக்கும் முடிவை அறிவிப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுபாக்கம்
ஜனா






