கோரோனாவும் இணைய வழி கல்வியும்

கைப்பேசியும் இருபத்தோராம் நூற்றாண்டில் கல்வி கற்பிற்கும் ஆசானாக மாறிவிட்டது.

அனைவர் கரங்களில் குழந்தையாக மாறிவிட்டது.

கற்பதற்காக கற்பிப்பதற்காக கேட்பதற்காக

பேசுவதற்காக என கல்வி வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வீச்சிலும் பெரும் பாங்காற்றுகிறது

ஒரு சாண் அளவேயான கைப்பேசிக்கான

Coverage தேடி காடு மேடு மரம் முகடு என பாராமல் பார்க்க வேண்டும் என்ற உந்துதலினால்

மாணவரும் ஆசிரியரும் நாடிச் செல்வது வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

கற்க கற்றுக் கொடுக்க வேண்டும் ஆவலும் ஆசையுமே காரணம்

இணைய வழியில் இணைந்தே இருந்து இறுக்கமாக

கல்வியை பற்றிப் பிடிக்க அறிவுத் தாகமுள்ள உள்ளங்களின் அறிவுப் பசிக்கு நித்தமும் தீணி போடுகின்றது.

எழுதியவர்

பேகம் (Begum)

Add Comment