நான் என்னை காதலிக்கிறேன் …!

ஒரு மனிதனின் தோற்றம், நடத்தை, அணுகுமுறை, விருப்பு, வெறுப்பு எண்ணங்கள், செயல் போன்ற மாறுபட்ட பண்புகளால் தீர்மானிக்கப்படுவதே பெர்சனாலிட்டி அதாவது ஆளுமை எனப்படுகிறது. பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் பலர் வெளித் தோற்றம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். சிலர், நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிடலாம் என நினைக்கின்றனர். தவறு.

மிகப்பெரிய சாதனையாளர்களை எடுத்துக்கொண்டால் எப்போதும் தனித்துவமான ‘ஆளுமையை கொண்டிருப்பார்கள். ஏன் அது நம்மாளும் முடியாதா? முடியும். அவர்களிடையே பொதுவான சில பண்புகள் தென்படும். அவற்றின் விளக்கங்கள் பின்வருமாறு :

சமூக திறன்களை வளர்த்து கொள்ளல்:

சரியான பார்வை மட்டுமே உறவுகளுக்கு உதவி செய்ய உறுதுணை புரியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார் போல் சமூக திறமைகளை வளர்த்துக் கொள்ளுவது அவசியம். மற்றவர்களுடன் பழகும் போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடியுங்கள். கூடவே உங்களின் உடல்மொழியையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.

சமூக தொடர்புகளை புறக்கணிக்க வேண்டாம்:

நீங்களே உங்களை ‘நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்’ என தாழ்வாக நினைக்கிறீர்களா? முதலில் அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம்தான் வாய்ப்புகளை தேட வேண்டும். உருவாக்கி கொள்ள வேண்டும். பல்வேறு வகையான நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலம் பல்வேறுபட்ட மனிதர்களை சந்திப்பதன் மூலம் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள முடியும். உங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். தலைக்கனம் அல்ல பெருமிதம் மட்டுமே கொள்ள வேண்டும். தலைக்கனம் வேற பிற சிக்கல்களை உருவாக்கிவிடும். சமூக தொடர்பு உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

உடைகள் மீது மேலதிக கவனிப்பு:

எங்கு எந்தவித உடை அணிய வேண்டும் என்பதை சரியாக தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியம். அலுவலகம் செல்ல என்ன விதமான உடை அணிய வேண்டும், விழாக்களுக்கு என்ன அணிய வேண்டும் நண்பர்களுடனான சந்திப்பில் எவ்வாறான உடை அணிய வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிக, மிக அவசியம். நமது சரியான பார்வை ஆளுமைக்கு கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு நம்முடைய உடை எவ்வளவு பலம் சேர்க்கிறது என்பது முக்கியம். அதற்கு விலையுயர்ந்த ஆடைகள் தான் வலு சேர்க்கும் என எண்ணினால் மீண்டும் உங்களை நீங்களே ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் அடைக்குறீர்கள் என அர்த்தம். “கந்தையானாலும் கசக்கி கட்டு” எனும் பழமொழிக்கு ஏற்ப்ப எந்த ஆடையாயினும் அழகாக அணிந்து கொண்டால் தனி கம்பீரம் மிளிரும்.

தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள்:

தவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் பயணத்தில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். உடனே முடங்கிவிடாதீர்கள். தவறை யார் செய்தாலும் அவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனவே வெற்றிக்கான சிறு குறிப்புகளாக தோல்விகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.

எல்லா விஷயங்களிலும் சீரியஸாக இருக்க வேண்டாம்:

யாரும் சீரியஸான அதிகாரிகளை விரும்புவதில்லை. எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஒருவரையே நிர்வாகம் பெரிதும் விரும்பும். அதே சமயம் மற்றவர்கள் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் காயப்படுத்திவிடவும் கூடாது. இன்முகத்துடன் உரையாட கற்றுக்கொள்ளுங்கள் இயல்பாகவே உங்களின்பால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் எல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் வைத்து பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ளவதோடு, வெளிப்படுத்தவும் உதவும்.

improve personality

Add Comment