தேவையான விஷயங்களை மட்டும் படிக்கும் வாய்ப்பை கண்ணாடி கொடுத்தால் எப்படியிருக்கும்? IRL கண்ணாடிகள் இவ்வாய்ப்பை நமக்கு விரைவில் வழங்கவிருக்கின்றன.
1988 ஆம் ஆண்டு வெளியான They Live என்ற படத்தில் விளம்பரங்கள் நம்மை நுகர்வில் தள்ளுவதை கண்ணாடி அணிந்து உணர்வார் நாயகன் ரோடி பைப்பர். அதே விதத்தில் உருவாகியுள்ளது ஐஆர்எல் கண்ணாடிகள். ஆனால், இது தொலைக்காட்சி, கணினிகளிலுள்ள நிகழ்ச்சிகளை மட்டும் தடுத்து தேவையில்லாத செய்தித் திணிப்புகளிலிருந்து நம் மூளையை விடுவிக்கும்.
மக்களிடம் இக் கண்ணாடியைக் கொடுத்து பரிசோதித்திருக்கிறார்கள். இன்னும் சோதனையில் இருந்தாலும் நம்பிக்கைக்குரிய முயற்சி.






