உடல் இரத்த அணுக்களில் இருக்கும் இரும்புச் சத்து நிறைந்த ஹீமோகுளோபின் (hemoglobin), உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது. நம் உடல் முழுவதும் ஒட்சிசனை கொண்டு செல்ல ஹீமோகுளோபின் (hemoglobin) பயன்படுகிறது. எனவே, சரியான அளவில் உடலில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். #hemoglobin
பொதுவாக, ஆண்களுக்கு 14- 18 கி/ டெ.லி., பெண்களுக்கு 12- 16 கி/டெ.லி. ஹீமோகுளோபின் இருப்பது இயல்பு நிலையில் சேரும். உடலில், ஹீமோகுளோபின் அளவு குறையும் போது தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
எனவே,ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஹீமோகுளோபின் அளவு இயல்பு நிலையில் வைத்திருப்பதனால், உடல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் உணவு வகைகள்
போலிக் அசிட் (Folic acid)
பி-கொம்ப்ளக்ஸ் விற்றமின் வகையைச் சேர்ந்த போலிக் அசிட் (Folic acid) எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஃபோலிக் அசிட் குறைபாடு காரணமாக இரத்த அணுக்கள் குறைகின்றன. வாழைப்பழம், தக்காளி, முளைப்பயிறு, பீட்ரூட் போன்றவற்றில் போலிக் அசிட் உண்டு.
குப்பைமேனி தேநீர்

விற்றமின் பி, சி சத்து அதிகம் உள்ள குப்பைமேனி இலையின் தேநீர் பருக வேண்டும். சுடு தண்ணீரில், இரண்டு கரண்டி அளவிலான குப்பைமேனி இலைகளை சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
விற்றமின் சி

எலுமிச்சை, திராட்சை, பப்பாளி, ஒரஞ்சு,தக்காளி போன்ற விற்றமின் சி சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்

உடலில் இரும்புச் சத்து குறைபாடினால், ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருக்கும். கீரை வகைகள், பூசணி, பீட்ரூட், சிக்கன் கல்லீரல், பேரீச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
அப்பிள்

உடலுக்கு தேவையன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த அப்பிள், உடல் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. தினம் ஒரு அப்பிள் அல்லது அப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது.
தவிர்க்க வேண்டியவை
உடலில், குறைந்த ஹீமோகுளோபின் அளவு இருந்தால்,கோப்பி,
தேநீர், மதுபானம்

போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.






