பொறியியல் படித்து முடித்தும் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காத பொறியியலாளர் ஒருவர், மருத்துவர் ஆகிவிடலாம் என்று சிறிய மருத்துவமனை ஒன்றைத் திறந்தார்..
அவரது மருத்துவமனை வாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைத்தார்.
“எந்தத் தீர்க்க முடியாத நோயாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் நோய் குணமாகவில்லையெனில், உங்களுக்கு 1000 ரூபா மீளத் திருப்பி வழங்கப்படும் ”
இதைக் கவனித்த வேலையில்லாத மருத்துவர் ஒருவர்,இந்த போலி பொறியியல் மருத்துவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.
“டொக்டர், என் நாக்கால எந்த சுவையையும் உணர முடியல .”
‘நேர்ஸ் அந்த 23ஆம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூன்று சொட்டு விடுங்க’என்றார் பொறியியல் மருத்துவர்.
நேர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு ” ஐயோ டொக்டர்! இது பெற்றோல் ஆச்சே” என்று அலறினார் இவர்.
‘வெரி குட் .இப்ப உங்க சுவையரும்புகள் நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு,உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது .500 ரூபாவினை காசாளரிடம் செலுத்துங்கள் ‘.
உண்மையான மருத்துவர் வேறு வழி இல்லாமல் 500 ரூபாவை செலுத்திவிட்டு வெளியேறினார்.
ஆனாலும் ஆயிரம் ரூபாவை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை அவர் .சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த போலி பொறியியல் மருத்துவரிடம் சென்றார்.
” டொக்டர்,எனக்கு வர வர மறதி ரொம்ப கூடிக் கொண்டு வருது குணப்படுத்துங்க ” என்றார்.
‘நேர்ஸ் அந்த 23 ஆம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க ‘என்றார் பொறியியல் மருத்துவர்.
” ஐயோ டொக்டர்! இது பெற்றோல் ஆச்சே ” என்று அலறினார் இவர்..
‘வெரி குட் உங்க மெமரி பவர் நன்றாக வேலை செய்கிறது 500 ரூபா எடுங்க ‘.
இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .
” எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டொக்டர்”
‘சொறி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபா ‘ என்று ரூபா நோட்டை நீட்டினார் பொறியியல் மருத்துவர்.
“இது 500 ரூபா நோட்டாச்சே ” என்று பதறினார் இவர்.
‘வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்’.






