‘கூகுள்’ ஒரு பெரிய சவாலை முன்வைத்து, அதற்கான தீர்வை கண்டு பிடியுங்கள் என, ஒரு போட்டியை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில், ‘ஏ.என். ஏ. அவதார் எக்ஸ் பிரைஸ்’ என்ற போட்டியை அது அறிவித்திருக்கிறது.
இயற்கை பேரிடர், மருத்துவமனை, வயதானோர் வசிக்கும் வீடு என பல இடங்களில் பயன்படும் வகையில், ஒரு தொலைவியக்க ரோபோவை வடிவமைப்பது தான் இந்த போட்டியின் சாராம்சம்.
குறைந்தது, 100 கி.மீ. தள்ளியிருக்கும் ஒரு ரோபோவை இயக்கி, பிறருக்கு உதவும் ஏதாவது வேலையை செய்ய வேண்டும்.
அப்படி வெற்றிகரமாக சாதிக்கும் அணிக்கு, 64.74 கோடி ரூபா பரிசாகக் கிடைக்கும்.
தொலைவு, செலவு, நேரம் போன்ற தடைகளை கடந்து, ஒருவர் இன்னொருவருக்கு தன் திறமையை அல்லது அக்கறையை பரிமாற உதவுவதை, ‘அவதார்’ தொழில்நுட்பமாக வரையறுத்துள்ளது, கூகுள் எக்ஸ் பிரைஸ்.
போட்டிக்கு விண்ணப்பிக்க ஒக்டோபர் 31 வரை அவகாசம் தந்துள்ளது கூகுள். இடையே சில இடைக்கால மைல்கல் போட்டிகளை அது நடத்தி, 2021 ஒக்டோபர் வாக்கில், இறுதிப் போட்டி நடக்கும்.
ஏற்கனவே, தனியார் விண்வெளி முயற்சிகளை ஊக்குவிக்கும் நிலாவில் ஊர்தியை செலுத்தும் போட்டியை, பல கட்ட நிதியுதவிக்கு பின், கூகுள் திடீரென ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
கூகுளின் ரூ.64 கோடி பரிசு போட்டி!
9 years ago
No Comments






