இலங்கையில் குண்டு துளைக்காத எண்ணெய் கண்டுபிடிப்பு

குண்டு துளைக்காத எண்ணெய்யை கண்டு பிடித்துள்ளதாக ஹொரணை வடக்கு உடுவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த கண்டுபிடிப்பை மேற்கொள்ள பல வருடங்களாக உழைத்ததாகவும் குறிப்பாக,தனது பழைய ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட மந்திர தந்திரங்களை பயன்படுத்தி இந்த எண்ணெய்யை கண்டு பிடித்துள்ளதாகவும் அந்த இளைஞர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஹொரணை கரவஹேன பகுதியில் உள்ள பிரபல துப்பாக்கி சுடும் நபரை அழைத்து வந்து குறித்த இளைஞர் தயாரித்த இரு எண்ணெய் போத்தல்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

எனினும் துப்பாக்கி குண்டுகள் அந்த போத்தல்களை துளைக்கவில்லை.
இந்த சம்பவம் பிரதேச மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எண்ணெய்க்கு விஷ்னு கிராந்தி எண்ணெய் என பெயரிட்டுள்ளதாகவும் இதனை எந்த வர்த்தக நோக்கிலும் தான் தயாரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை,இந்த எண்ணெய்யை சட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

Add Comment