ஆண்களே! உங்களது விதையுறுப்பில் அரிப்பு மிகவும் அதிகமாக உள்ளதா? இதனால் பல பொது இடங்களில் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிறீர்களா? இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? விதையுறுப்பு அரிப்பு என்பது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை. விதையுறுப்பில் இப்படி தாங்கிக் கொள்ள முடியாத அளவில் அரிப்பு ஏற்படுவதற்க பல காரணங்கள் உள்ளன.
விதையுறுப்பு பகுதி எப்போதும் காற்றோட்டம் இல்லாமல் மூடியே இருப்பதால், அப்பகுதியில் அதிகம் வியர்க்கும். இப்படி அப்பகுதியில் அதிகம் வியர்க்கும் போது, அவ்விடத்தில் கிருமிகளின் பெருக்கம் அதிகரித்து, அது கடுமையான அரிப்பை உண்டாக்கும். சில சமயங்களில் ஆணுறுப்பின் மோசமான சுகாதாரத்தினாலும், அவ்விடத்தில் தொற்றுக்கள் ஏற்பட்டு அரிப்புகள் ஏற்படும்.
இது தவிர்த்து இதர பிரச்சனைகளும் விதையுறுப்பில் அரிப்பை உண்டாக்கும். கீழே ஆண்களின் விதையுறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதைப்பற்றி இப்போது பார்க்கலாம் :
எரிச்சல் (Irritable)
உலர் வெப்பத்தில் நீண்ட நேரம் நடக்கும்போது, பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றியுள்ள தோல் பொதுவாக வறட்சியடையும். நீண்ட நேரம் உடற்பயிற்சியை செய்யும் போது, அப்பகுதியில் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடும். இன்னும் சில நேரங்களில் அதிக அரிப்பின் காரணமாக, அவ்விடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட ஆரம்பிக்கும்.
அறிகுறிகள்:
- விதையுறுப்பு பகுதியைத் தொட்டாலே எரிவது
- விதையுறுப்பு சிவந்திருப்பது
- விதையுறுப்பின் மேல் பகுதியில் வெட்டு காயங்கள்
பூஞ்சை தொற்று (Fungal infection)

பல பூஞ்சைகள் நம் கண்களுக்குப் புலப்படாது. பூஞ்சை வழக்கமாக பெரிய பகுதிகளில் வாழ்கிறது. பூஞ்சை தொற்றுகள் எளிதில் பிறப்புறுப்பு பகுதிகள் மற்றும் விதையுறுப்புக்கிளில் ஏற்படும். அதுவும் பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது மோசமான சுகாதாரத்தால் பூஞ்சை தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
ஒருவகையான பூஞ்சைத் தொற்று தான் கேண்டிடியாசிஸ் தொற்று (candidiasis). கேண்டிடா பூஞ்சை நம் உடலினுள் குடல் மற்றும் சருமத்தில் வாழ்பவை. இவை கட்டுப்பாடின்றி அதிகம் வளரும் போது, தொற்றுக்களை உண்டாக்குகின்றன. இதன் விளைவாக விதையுறுப்புக்களில் அரிப்புக்கள் ஏற்படுகின்றன. மற்றொரு வகையான பூஞ்சை தொற்று தான் டெர்மடோபைட். இதனை ஜாக் இட்ச் (Jock itch) என்று அழைப்பர்.
ஏனைய அறிகுறிகள்:
- சிறுநீர் கழிக்கும் போது வலி
- ஆண்குறி மற்றும் விதையுறுப்பைச் சுற்றி எரிச்சல்
- ஆணுறுப்புத் தோல் பகுதியில் வீக்கம்
- விதையுறுப்பு அல்லது ஆணுறுப்பு சிவந்திருப்பது
- அசாதாரண துர்நாற்றம்
- ஆணுறுப்பு அல்லது விதையுறுப்பில் வறண்டு தோலுரிதல்
பிறப்புறுப்பு ஹெர்பீஸ் (Genital herpes)
பிறப்புறுப்பு ஹெர்பீஸ் (Genital herpes) என்பது ஒரு வகையான வைரஸ் தொற்று. இது உடலுறவு அல்லது தொற்று உள்ளோருடன் உடலுறவில் ஈடுபடும் போது வரக்கூடும். இந்த வகையான வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், விதையுறுப்பு கடுமையான அரிப்பை உண்டாக்குவதோடு, மிகுந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
ஏனைய அறிகுறிகள்:
- மிகுந்த களைப்பு
- ஆணுறுப்பு மற்றும் விதையுறுப்பைச் சுற்றி கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல்
- ஆணுறுப்பைச் சுற்றி வெட்டுக் காயங்கள்
- சிறுநீர் கழிக்கும் போது வலி
கோனேரியா (Goneria)
கோனேரியா என்பது பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு வகையான பாலியல் தொற்றுநோய். இது அந்தரங்க உறுப்பை பாதிப்பதோடு, வாய், தொண்டை, மலப்புழை போன்ற இடங்களையும் பாதிக்கும். இது பாதுகாப்பற்ற
உடலுறவால் எளிதில் பரவக்கூடும். கோனேரியா தொற்று ஏற்பட்டிருந்தால், விதையுறுப்பு கடுமையான அரிப்புடன், வீங்கி இருக்கும்
.
இதன் மற்ற அறிகுறிகளாவன:
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்
- ஆண் குறியில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்மம் வெளியேறுதல்
- விதையுறுப்பு வலி, அதுவும் ஒரே ஒரு விதையில் மட்டும் வலியை உணர்தல்
பிறப்புறுப்பு மருக்கள் (Genital warts)
பிறப்புறுப்பு மருக்கள் மனித பாபில்லோமா வைரஸால் (Human papillomavirus (HPV)) ஏற்படுபவை. இந்த வகையான பிறப்புறுப்பு மருக்களை பலர் சரியாக கவனித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் இவை மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். உடலின் மற்ற பகுதிகளில் வரும் மருக்களைப் போல், பிறப்புறுப்பு பகுதியில் வரும் மருக்கள் சிறிய அளவில், அரிப்புகளுடனோ அல்லது அரிப்புகளின்றி
யோ புடைத்திருக்கலாம்.
பெரும்பாலும் இந்த மருக்கள் வலது பக்க விதையுறுப்பில் தான் உருவாகும். பிறப்புறுப்பு மருக்கள் இருக்கும் போது, அப்பகுதியில் வீக்கம் அல்லது உடலுறவின் போது இரத்தக்கசிவைக் காணலாம்.
கிளமீடியா (chlamydia)
கிளமீடியா என்பதும் பாக்டீரியாக்களால் பரவக்கூடிய ஓர் பாலியல் தொற்றுநோய். இந்த வகையான தொற்று உடலுறவின் போது விந்து வெளியேறாமல் இருந்தாலும் பரவும். மற்ற பாலியல் நோய்த்தொற்றுகளைப் போல், இதுவும் உடலுறவுடன் வாய்வழி உறவு கொள்வதன் மூலம் பரவும். கிளமீடியா தொற்று இருந்தால், விதையுறுப்பில் அரிப்பு மற்றும் வீக்கம் இருக்கும். கிளமீடியா இருந்தால், ஒரே ஒரு ஆண் விதையில் மட்டும் வலி மற்றும் வீக்கம் இருக்கும்.
இந்த தொற்றின் இதர அறிகுறிகளாவன:
- ஆண் குறியில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்ம கசிவு
- சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்
சொறி சிரங்கு
ஸ்கேபிஸ் என்னும் சொறி சிரங்கு தொற்று, சிறிய நுண்ணிய பூச்சியால் வரக்கூடியது. இந்த வகை பூச்சியை மைக்ரோஸ்கோப்பில் தான் காண முடியும். இந்த தொற்று உள்ளோருடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது, இது பரவும். இந்த தொற்றிற்கான அறிகுறி தென்பட பல வாரங்கள் ஆகும்.
இந்த தொற்றின் பொதுவான அறிகுறிகளாவன:
- கடுமையான அரிப்பு
- முக்கியமாக இரவு நேரத்தில் தூங்கவே முடியாத அளவில் தொடர்ச்சியான அரிப்பை அனுபவித்தல்.








