மேஷம்

ரிஷபம்

ரிஷப இராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்வதில் கில்லாடி. இவர்களின் காதல் உண்மையானதாகவும் தூய்மையானதாகவும் இருக்கும்.
மிதுனம்
மிதுன இராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். இவர்கள் காதலிப்பது அரிதே. இவர்களை மகரம் மற்றும் மேஷ இராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்
இவர்களுக்கு காதல் எந்தவகையிலும் ஒத்து வராது. கடக இராசிக்காரர்கள் சில நேரங்களில் காதல் வயப்படலாம், ஆனால் அது தோல்வியிலும் முடியலாம். இவர்கள் காதலிப்பதை தவிர்ப்பதே நல்லது.
சிம்மம்
சிம்ம இராசிக்காரர்களுக்கு காதல் என்பதுமகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் இவர்களுக்கு உண்டு.
கன்னி
கன்னி இராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் உள்ளவர்கள். காதலையும் அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்கள். இந்த இராசிக்காரர்கள் நற்குணங்கள் உடையவராகத் திகழ்வர்.
துலாம்
இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம்செய்து கொள்வது உகந்ததல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும்.
விருச்சிகம்
விருச்சிக இராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட தன்னை மற்றவர்கள் காதலிப்பதையே அதிகம் விரும்புவர். பெண்களைப் பார்ப்பதைவிட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் எட்டாக்கனியாக இருக்கும்.
தனுசு
இவர்களின் காதல் வெற்றி பெறும். காதலில் திறமைசாலியாக இருப்பர். காதலில் வெற்றியடைய அதிகமாக கஷ்டப்படுவர். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவர். காதல் எண்ணம் அதிகம் உள்ளவர்கள்.
மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள் ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களது ஆத்மார்த்தமான காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம்
கும்ப இராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பார்கள். ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவுக்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலில் இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும்.
மீனம்
இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் விரும்புகின்றார்களோ அவர்களை இவர் நேசிப்பர். இந்த இராசிக்காரர்கள் யோசித்து எல்லாக் காரியங்களையும் நடத்தி முடிப்பர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்வர்.


