பூமியைப் போன்று மனிதர்கள் வசிக்கக் கூடிய வேறு 10 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா (NASA) அறிவித்துள்ளது.
மனிதர்கள் வசிக்கக் கூடிய வேறு கிரகங்கள் தொடர்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கெப்லர் தொலைநோக்கி மூலம் ஆய்வு மேற்கொண்டு வரும் நாசா விஞ்ஞானிகள் குழுவே இத் தகவலினை தற்போது வெளியிட்டுள்ளது.மேலும்,குறித்த 10 கோள்களும் 97வீதம் பூமியைப் போன்று காணப்படும் அதேவேளை அங்கு மனிதர்கள் வாழக்கூடிய சீதோஷ்ண நிலையே நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
நாசா விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இதில் பூமி போன்ற உருவத்திலும் தட்பவெப்ப நிலையிலும் சுமார் 50 கிரகங்கள் வரை இருப்பதாகவும் அதில் 10 கிரகங்கள் பூமியை போலவே சூரியனை சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியை போன்ற தட்பவெட்ப நிலை மாத்திரமன்றி தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளும் இந்த கிரகங்களில் உள்ளதாக நாசா மேலும் தெரிவித்துள்ளது.







