இன்றைய காலகட்டத்தில், டிவி இன்றி அன்றாட வாழ்வு முற்றுப் பெறுவதில்லை. ஆனால், இப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி டிவி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடாத்தியுள்ளனர்.
அவ்வாறு லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரியவர்கள், குழந்தைகள் என வயது பாகுபாடு இல்லாமல் 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக டிவி பார்ப்பதால் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.







