ஹவாய் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகை ஆக்டோபஸ்

ஆழ்கடல் பற்றிய ஆராய்ச்சி ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று ஹவாய் தீவிற்கு அருகாமையிலுள்ள பசுபிக் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்பு அறியப்படாத இனங்களை சேர்ந்தவை என்றும், ஒரு “ஆவி போன்று” ஆக்டோபஸ் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் பயனர்களால் “கஸ்பர் (Casber the friendly ghost)” என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இப்பால் வெள்ளை உயிரினம், பசிபிக் பெருங்கடலில் 4.290 மீட்டர் ஆழத்தில் படம்பிடிக்கப்பட்டது.

துடுப்புகள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் பலர் இந்த உயிரினத்திற்கு காட்டூனில் வரும் ஆவியின் பெயரான “கஸ்பர்” என்ற பெயரை வைக்க வேண்டும் என தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டு வருகின்றனர்.

Add Comment