‘ வேதாந்தம் மூலம் வெற்றியும் அமைதியும் ‘ எனும் தலைப்பில் ஸ்ரீமதி உமையாள் வேணுகோபால் கடந்த 12 ஆந் திகதி பெப்ரவரி, 2016 இந்திய கலாசார மண்டபத்தில் விரிவுரையாற்றினார். இவர் சுவாமி பார்த்தசாரதியின் சிஷ்யை ஆவார். வேதாந்த கல்லூரி(VedantaAcademy)யில் மூன்று வருட முழு நேர வேதாந்தக் கற்கை நெறியை கற்று, வேதாந்த வகுப்புகளையும் விரிவுரைகளையும் ஆற்றி வருகிறார்.
வாழ்க்கை என்பது ஒரு கலை, ஒரு திறன், ஒரு நுட்பம், மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்தக் கலையை கற்றுக் கொள்வது அவசியம் என்பது உரையின் கருப்பொருளாக அமைந்திருந்தது. இக்கலையை கற்பதன் மூலம் வெற்றியையும் அமைதியையும் ஒருங்கே அனுபவிக்கலாம் எனும் கருத்து அழகாகவும், எளிமையாகவும் விளங்கப்படுத்தப்பட்டது. இவ்விரிவுரையில் வெவ்வேறு கலாச்சார, சாதி,சமய ,பின்னணியில் இருந்தும் பார்வையாளர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
பார்வையாளர்கள் – வலமிருந்து இடம்:
திருமதி. இராஜசிறீ பெறேரா, தலைவர், இந்திய கலாச்சார நிலையம்,கொழும்பு.
தெ.ஈஸ்வரன் – பிரபல தொழில் அதிபர்.
திரு. பி. ஏ. அபயரட்ன – அதிபர், ராயல் கல்லூரி, கொழும்பு 07.
திரு.கமல் அபயசிங்க – தலைவர், EDEX







