வாய்விட்டு சிரிங்க

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று கேட்கக் கூடாது.

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா?

******************************************

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னத நினைச்சு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

மனைவி: ????????????

Add Comment