தலை சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது(20-20) தொடர்களான ஐ.பி.எல், பிக் பாஷ், கரிபியன் இருபதுக்கு இருபது(20-20) போன்ற தொடரிகளில் விளையாடி தனக்கு அலுத்துப் போனதன் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக முரளி கூறியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பினனர் தனக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை என்பதனால் தான் இந்தப் போட்டிகளில் விளையாடியதாகவும் இந்த தொடரே தன் இறுதித் தொடராகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வங்கடே மைதானத்தில் விளையாடும் போட்டியே இறுதிப் போட்டியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே மைதானத்திலேயே முரளி தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்து இருந்தாலும் உலக இருபதுக்கு இருபது(20-20) தொடரில் இலங்கை அணி இந்திய அணியை வெற்றி கொண்டது தனக்கு சந்தோசம் தருவதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.






