வளைக்க கூடிய டீவியை அறிமுகப்படுத்தும் LG

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் புதுமையான பல விஷயங்களை அடுத்தடுத்து கொண்டு வரும் எல்.ஜி. நிறுவனம் (LG)தற்போது பேப்பரை சுருட்டி வைப்பது போல, திரையையும் சுருட்டி வைத்துக் கொள்ளும் டிவியை கண்டுபிடித்துள்ளது.

சென்ற வாரம் இடம்பெற்ற வருடாந்த நுகர்வோர் எலெக்ட்ரானிக் ஷோவில் (CES) உலகின் முதல் 65 அங்குல அளவைக் கொண்டிருக்கும் புதிய டீவியை எல்.ஜி. நிறுவனம் (LG)அறிமுகப்படுத்தியது.

ஓ.எல்.இ.டி ( OLED) எனப்படும் தொழில்நுடப்த்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிவி, தேவைப்படும் போது சுவற்றில் மாட்டிக்கொண்டு, பயன்பாட்டில் இல்லாதபோது ஒரு தாளின் காகிதத்தை போல உருட்டி வைத்துக்கொள்ள முடியும்.

மேலும், 65 அங்குல அளவுடன் 4K பிக்சல் கொண்டுள்ளதால், திரையில் தெரியும் காட்சிகள் அனைத்தும் நேரில் தெரிவது போன்ற துல்லிய பிம்பத்தை ஏற்படுத்தும்.

இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.ஜி டிவி (LG TV), இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், 88 அங்குல அளவுடன், 8K பிக்சல் கொண்ட திரையை வடிவமைத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் எல்.ஜி நிறுவனம் (LG)நிறுவனம் கூறியுள்ளது.

Add Comment