ஆப்பிள் விற்பனையகத்தில் வெடித்த ஐபோன் பேட்டரி

Apple Store Zürich
ஆப்பிள் ஐபோன் பேட்டரியும் சில நேரங்களில் வெடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆப்பிள் விற்பனையகத்திலேயே ஐபோன் பேட்டரி வெடித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இது குறித்த தகவலை சுவிஸ் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.  சுவிற்சர்லாந்தின் ஜூரிச் நகரில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனையகத்தில் ஐபோன் பழுதுபார்க்கும் ஊழியர் ஒருவர் ஐபோனை எடுத்தபோது அதிக சூடான ஐபோன் பேட்டரி வெடித்து,  அருகில் இருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தால் ஊழியரின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த மற்றைய ஊழியர்களுக்கு காயமில்லை. வெடித்த பேட்டரி மீது மணலை வீசி அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதற்கிடையில் கடைக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

Add Comment