ரோபோக்களின் ஆதிக்கம்;800மில்லியன் பேர் வேலையிழப்பர்

தொழில்துறைகளில் அதிகரித்துவரும் ரோபோக்களின் ஆதிக்கம் காரணமாக இன்னும் 13ஆண்டுகளில் 800 மில்லியன் பேர் வேலைவாய்ப்பினை இழக்க வேண்டிவரும் என அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டியங்கும் பிரபல முகாமைத்துவ ஆலோசனை நிறுவனமான மக்கின்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தம்முடைய மதிப்பீட்டின்படி 2030 ஆம் ஆண்டளவில் 800 மில்லியன் தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவை குறிப்பாக துரித உணவகங்களில் பணியாற்றுவதற்கும் இயந்திரங்களை இயக்குவதற்குமான பணியிலேயே அதிகம் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை,தோட்டத்துறை சார் தொழிலாளர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்கள் இதனால் மிகவும் குறைந்தளவே பாதிக்கப்படுவர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment