பகவத்கீதை உங்கள் வாழ்வின் வழிகாட்டி

பகவத்கீதை வாழ்வின் வழிகாட்டி ஆகும். இது பண்டைய தத்துவமான வேதாந்தத்தை விளக்குகிறது. வேதாந்தம், வாழ்க்கை பற்றிய காலத்தால் அழியாத, உலகளாவிய கோட்ப்பாடுகளை விளக்குகிறது. இவை சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டவை. இந்தக் கோட்ப்பாடுகளை ஒழுங்குமுறையாகக் கற்கும் போது புத்தி விருத்தியாகிறது.கூரிய புத்தி, வாழ்வில் ஏற்படும் எந்த சவால்களையும் – தொழில், சமூகம், குடும்பம் -எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது. அமைதியும் செல்வச்செழிப்பும் நிறைந்த வாழ்விற்கு வழிகோலுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வேதாந்தம், மனிதனுக்குள் உள்ள முழுமையை உணர வழிகாட்டுகிறது.

பகவத்கீதையின்  பதினெட்டாவது அத்தியாயம் சாத்வீகம், ராஜசம், தாமசம் எனும் மூன்று குணங்களை விளக்குகிறது. மக்களின் வெவ்வேறு இயல்புகளுக்குக் காரணம், இந்த மூன்று  குணங்களும் வெவ்வேறு விதத்தில் சேர்வதாகும். இந்த இயல்புகளை அடிப்படையாக வைத்து மக்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

பிராமணர், சத்திரியர், வைஷ்ணவர், சூத்திரர். இந்த நான்கு வர்ணத்தவரும் அவரவருக்குரிய கடமையைச் செய்வது அவசியம். சத்திரியனாகிய அர்ச்சுனன் அவன் கடமையைச் சரிவரச்  செய்து மோட்சத்தை அடைய பகவான் கிருஷ்ணர் கீதையில் வழிகாட்டுகிறார்.

இந்தியா, பூனேயில் உள்ள வேதாந்தக் கல்லூரியில்(Vedanta Academy)மூன்று வருட வேதாந்தக்கற்கை நெறி கற்பிக்கப்படுகிறது. உலகம் போற்றும் தத்துவ ஞானியும், முகாமைத்துவ ஆலோசகருமான சுவாமி பார்த்த சாரதியே வேதாந்தக் கல்லூரியின் ஸ்தாபகரும், பிரதம ஆசானும் ஆவார். உலகின்  பல்வேறு பாகங்களில் இருந்தும், வேறுபட்ட கலாச்சார பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களும் யுவதிகளும் வேதாந்தக்கல்லூரியில் இணைந்து வாழ்க்கை நுட்பத்தைக்  கற்றுக்  கொள்கின்றனர். மூன்று வருட வேதாந்தக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த சுவாமி பார்த்தசாரதியின் சிஷ்யர்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வேதாந்த  விரிவுரைகள், வாராந்த வகுப்புகள், சுய முகாமைத்துவ நிகழ்ச்சிகளை  நடத்தி வருகின்றனர்.

சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையுமான சுனந்தாஜி, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வேதாந்தத்தைக் கற்று, கற்பித்து வருகிறார். இன்றைய காலத்திற்கு ஒப்பாக பகவத்கீதையை தெளிவாக விளக்கும் அவரது உரைகள் இந்தியாவிலும்  பிற நாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளன. நாளாந்த வாழ்வில் வேதாந்தத்தின் பிரயோகம் பற்றி உலகளாவிய ரீதியில் சுனந்தாஜி பல முன்னணி முகாமைத்துவ நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் உரையாற்றி வருகிறார்.

 

நிகழ்வுகள்

சுனந்தாஜி, பகவத்கீதையின் 18 ஆம் அத்தியாயமான ‘சந்நியாசம் மூலம் மோட்சம்’ பற்றி மார்ச் 2 ஆந் திகதியிலிருந்து 6 ஆந் திகதி வரை தினசரி மாலை 6.30 மணியிலிருந்து 8.00 மணி வரை தும்புல்லை சந்தியில் அமைந்துள்ள பௌத்த கலாசார மண்டபத்தில் உரையாற்றுவார். பக்திப்பாடல்கள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். கணபதி செட்டி செல்வநாதன் அறக்கட்டளை நிதியம், இந்நிகழ்வின் பிரதம அனுசரணையாளர் ஆவர்.

சுவாமி பார்த்த சாரதியின் சிஷ்யையான உமையாள் வேணுகோபால் வாராந்த வேதாந்த வகுப்புகளை நடாத்தி வருகிறார்.

இந்த வகுப்புகள், வேதாந்தத்தை  முறையாக ஆழ்ந்து கற்கவும், கலந்துரையாடவும் வாய்ப்பினை வழங்குகிறது.

  1. பகவத் கீதை அத்தியாயம் 1

பிரதி சனிக்கிழமை, மாலை 5 – 6.15, அஷ்டாங்க யோகா மந்திர், இல. 3 ரிஜ்வே  இடம், கொழும்பு  – 04.

  1. The Holocaust of Attachment
    பிரதி செவ்வாய்கிழமை , மாலை 7 – 8.15,. அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ்,

கொழும்பு – 03.

  1. இளம் தலைமுறையினருக்கு வேதாந்தம் – The fall of the Human Intellect

மார்ச் 8 ஆந் திகதி முதல் மார்ச் 29 ஆந் திகதி வரை, பிரதி வியாழக்கிழமை மாலை 6 – 7.15, அர்னொல்டா இடம், கொழும்பு – 05.

அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
தொடர்பு: Vedanta Institute Colombo, 0773231218, info@vedantacolombo.org, facebook.com/vedantainstitutecolombo.
Bhagavad gita speech sri lanka 2018

Add Comment