கிரைப் வாட்டர்(Gripe water) குழந்தைக்கு கொடுப்பது நல்லதா???

குழந்தை அழுதாலோ வயிற்றில் எதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ உடனே நாம் தேடுவது இந்த கிரைப் வாட்டரை தான். தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் இந்த பழக்கம் உண்மையில் நல்லதா?

ஒவ்வொரு தாய்மார்களும் இதை பற்றி முழுவதுமாக அறிந்து செயல்படுவது தான் உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதும் கூட.

கிரைப் வாட்டர் என்பது தண்ணீர் அமைப்பில் உள்ள ஒரு டானிக். இது குழந்தைகளின் சீரண சக்திக்கு பெரிதும் உதவுகிறது. வயிற்று வலி, அஜீரணம், வாய்வு, விக்கல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது.

உண்மையான கிரைப் வாட்டரில் தண்ணீர், வெந்தய எண்ணெய், சோடியம் பைகார்பனேட், சர்க்கரை மற்றும் 3.6% ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது.

ஆனால் நவீன காலங்களில் மருத்துவர்கள், பெற்றோர்கள் இதில் சேர்க்கப்படும் ஆல்கஹாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது கைவிடப்பட்டது.

சில பிராண்ட்கள் இதில் செயற்கை சர்க்கரைகளை சேர்க்கின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் நாட்டிற்கு நாடு உற்பத்தியாளர்களை பொறுத்து வேறுபடுகிறது.

இது அருந்துவது பாதுகாப்பானதா???

குழந்தை அழுதால் ஏதேனும் வயிற்றுக் கோளாறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் கிரைப் வாட்டர் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால் அந்த கிரைப் வாட்டர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி முடிவுகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இதில் அடங்கியுள்ள பொருட்கள்…….

வெந்தய விதை எண்ணெய்

Fenugreek oil

 

வெந்தய மற்றும் பெருஞ்சீரக விதை எண்ணெய் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்கள் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயிறு வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது நிவாரணம் அளிக்கிறது. சில குழந்தைகளுக்கு இது அலற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோடியம் பைகார்பனேட் (பேக்கிங் சோடா)

bicarbonat

 

சோடியம் பைகார்பனேட் இவையும் சேர்க்கப்படுகிறது. இவை இந்தியாவில் சர்க்கைக்ஷாரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

உங்கள் குழந்தை அமிலத் தன்மை பிரச்சினைக்காக அழுதால் அதற்கு இது தீர்வளிக்கும். ஆனால் அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் மில்க் – ஆல்கலி என்ற நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது.

இது என்னவென்றால் உங்கள் குழந்தைகள் குடிக்கும் பாலில் உள்ள கல்சியம் சத்து இந்த அதிகப்படியான சோடியம் பைகார்பனேட் காரத்தால் அவர்களின் இரத்தத்தில் கல்சியம் அளவு அதிகரிக்கிறது.

எனவே ஆறு மாத குழந்தைகள் எப்பொழுதும் தாய்ப்பால் குடிப்பதால் இதை நீண்ட நாட்கள் அவர்களுக்கு கொடுக்கும் போது நாளடைவில் சிறுநீரக பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே ஆறு மாத குழந்தைகளுக்கு, மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் (Alcohol)

alcohol-pouring-into-glass

 

3.6 % ஆல்கஹால் என்பது குழந்தைகளுக்கு நல்லது அல்ல. இதில் சேர்க்கப்படும் ஆல்கஹால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது மட்டுமல்லாமல் இளைய வயதினரை அடிமையாக்கவும் செய்து விடுகிறது.
இது ஒரு தேவையில்லாத பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்க்கரை ( Suger)

Insulin injection white a pile of sugar

 

இதில் சேர்க்கப்படும் சர்க்கரை வயிறு வலியால் துடித்து அழுகின்ற குழந்தையை முதலில் அமைதிப்படுத்த உதவுகிறது. ஆனால் அதிகப்படியான சர்க்கரை அவர்களுக்கு வயிற்று புழுக்கள், பற்சொத்தை போன்ற பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக கூட அமைகிறது.

எனவே கிரைப் வாட்டர் கொடுப்பதற்கு முன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சர்க்கரையின் அளவை பார்த்து விட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

 

ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது நல்லது. இவை அவர்களின் சீரண மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைய உதவும். எனவே இந்த மாதிரியான பிரச்சினை சமயத்தில் ஃபார்முலா மில்க்கிற்கு பதிலாக தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். ஆறு மாதக் குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுத்தால் குடலில் பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்புள்ளது. எனவே அதை தவிருங்கள்.

பெற்றோரே இனி கிரைப் வாட்டர் பயன்படுத்தும் முன் அதில் சேர்க்கப்படும் பொருட்களை அறிந்து கொண்டு மேலும் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னர் பயன்படுத்துவது சிறந்தது.

Add Comment