ஒற்றைக் குழந்தை போதும் என்று நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு…

திருமணமாகி அல்லது ஒன்றாக வாழ முடிவு செய்யும் பெரும்பாலான ஜோடிகள் பொதுவாக குழந்தைபேற்றை திட்டமிடுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பது பொதுவானது, இது ஒரு நன்மையாகவும் கருதப்பட்டது. முக்கியமாக குழந்தைகள் சிறு வயதிலேயே வேலை செய்யத் தொடங்குவதற்கு இதுவே காரணமாக இருந்தது.

ஆனால் கால மாற்றத்தோடு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளையும் கருத்தில் கொண்டு பெரிய கூட்டு குடும்பத்தைக் கொண்டிருப்பதை நடைமுறையில் யாரும் விரும்புவதில்லை. பலரும் ஒரு குழந்தை மட்டுமே போதும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக( Single child) வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்டின் நிலை வேறு.

மற்ற சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் சிங்கிள் சைல்ட்( Single child) என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும். ஆனால், தனிக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது.

எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த நேரம் குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.

single child felling lonely

 

2, 3 வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும். குழந்தைகளின் எண்ணிக்கை நீங்கள் பெற்றோர் என்பதை வரையறுப்பதில்லை, அவர்களை அன்பானவர்களாகவும், பண்பானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் வளர்பதிலேயே உள்ளது.

Add Comment