மொபைலை(Mobile) அங்கே வைக்காதீர்கள்

இக்காலத்தில் கைத்தொலைபேசி வைத்திருக்காதவரை பார்ப்பதே அரிது.  ஒரு கைத்தொலைபேசி இருப்பதே பெரிய விடயம் என்று இருந்த காலம் போய் ஒவ்வொருவரும் வீட்டு பாவனைக்கொன்று, அலுவலக பாவனைக்கொன்று என்று இரண்டு மூன்று தொலைபேசிகளை வைத்திருக்கின்றார்கள். உலகம் முழுவதிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக கைத்தொலைபேசியும் நம் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
நேரகாலம் இல்லாது அனுதினமும் படுக்கை வரையிலாக நம்முடனேயே நமது மொபைல்களும் வாழ்கின்றன. இந்நிலைப்பாட்டில், உங்கள் தொலைபேசியை சில இடங்களில் வைத்திருப்பது சாதனத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்பது உங்களில் எதனை பேருக்கு தெரியும் ??????
தெரியாது என்றால் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
phone in back pocket
பின் பாக்கெட்-
                               தொலைபேசிகள் தொடுதிரைகளைக் கொண்டிருக்கின்றன, ஆக அது விரல்களுக்கு மட்டுமின்றி இதர தொடுதல்களுக்கும் பிரதிபலிப்பை
 ஏற்படுத்தும். இந்த காரணத்திற்காக உங்கள் கருவி, ஒரு அவசர எண்ணை அல்லது எதோ ஒரு எண்ணிற்கு தானாகவே டயல் செய்வது மிகவும் எளிது. உங்கள் வயிற்றிலும் கால்களிலும் நீங்கள் அடிக்கடி வலியை உணர்கிறீர்களா? இது உங்கள் பாக்கெட்டிலுள்ள தொலைபேசியின் விளைவாக இருக்கலாம். தொலைபேசியை பின்பக்க பாக்கெட்டில் வைத்திருப்பதை மறந்து, அதன் மேலேயே அமர்ந்து அதன் தொடுதிரையை நீங்களே உடைக்கலாம்.
phone in sports bra
உள்ளாடை-
                  மருத்துவத்துறையில், செல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்குமா.? என்பது பற்றிய ஒருமித்த கருத்து ஏதுமில்லை. ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, பெண்கள் அவர்களின் மேலாடைகளுக்குள் மொபைலை வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். எனவே பெண்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

keeping the phone in front pocket is harmful

முன் பாக்கெட்-
                   ஆண்கள் கைப்பைகளை சுமந்து செல்வதே இல்லை. ஏனெனில் அவர்களின் முன் பாக்கெட்டுகளே எதற்கும் போதுமானதாக உள்ளது. அது வசதியாகவும் இருக்கும். ஆனால் இதனால ஆண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஒரு தொலைபேசியின் மின்காந்த கதிர்வீச்சானது(Electromagnetic radiation) விந்தின் தரத்தையும், அளவையும் மோசமாக பாதிக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஒருவர் நீண்ட நேரம் அவரின் முன்பக்க பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்தால் அவருக்கு ஆபத்தும் அதிகம் தான்.
teenage-girl-talking-on-a-cell-phone-
உங்களின் மேனியோடு-
                      உங்கள் சருமத்திற்கு எதிராக உங்கள் செல்போன் வைக்காதீர்கள். இதைச் செய்யும்போது, ​​திரை மற்றும் தொலைபேசி பொத்தான்களில் உள்ள பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தின் தோலுக்கு மாற்றப்படுகின்றன, மேலும் மின்காந்த கதிர்வீச்சு இன்னும் நெருக்கமாகிறது. சரி அப்போது எப்படி தான் தொலைபேசியில் பேசுவது.? உங்கள் மொபைல் மற்றும் தோலுக்கு இடையே குறைந்தது 0.5-1.5 செமீ இடைவெளி இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
while charging
சார்ஜ் செய்யும் போது-
                           தொலைபேசியை சார்ஜிங் செய்யும் போது உங்கள் உடல்நலத்தை எதுவும் பாதிக்காது ஒருவேளை நீங்கள் சார்ஜிங் செய்யப்படும் கருவிக்கு மிக நெருக்கமாக இருந்தால் மின்காந்த கதிர்வீச்சு உங்களை பாதிக்கலாம். இதிலிருந்து தப்பிக்க உங்கள் மொபைலை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சார்ஜ் செய்யும் பழக்கத்திற்கு வாருங்கள் அதுவும் நீங்கள் வேறுவேலையில் பிசியாக இருக்கும் போது சார்ஜ் செய்யுங்கள். நாள் ஒன்றிற்கு ஒருமுறை சார்ஜ் ஆனது உங்களின் பேட்டரிக்கு, மொபைலுக்கும் கூட நல்லது தான்.
camp-fire

 

வெப்பமான இடங்கள்-
                    குளிரைப்போலவே உயர் வெப்பநிலைகளும் மின்னணு இயந்திரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உடனே சூடான காலநிலையில், காரிலோ அல்லது கடற்கரையிலோ உங்கள் தொலைபேசியை விட்டுவிட கூடாதா.? என்று கேட்க வேண்டாம். நெருப்பு அல்லது அடுப்புகளுக்கு அடுத்ததாக மொபைலை வைத்திருக்க, வைக்க வேண்டாம்.
sleeping-boy-with-tablet
குழந்தைகளின் அருகில்-
             அவசர அவசரமான அம்மாக்கள் அடிக்கடி தங்கள் தொலைபேசியை தங்களின் குழந்தைகளின் அருகிலேயே வைத்து விடுகிறார்கள். இது பாதுகாப்பற்றது என்று சில ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். குழந்தைகள் மீதான செல்போன்களின் தாக்கமானது அவர்களின் செயல்திறன் மற்றும் கவனக்குறைவு சீர்குலைவு போன்ற நடத்தை பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
keeping phone under the pillow is harmful
தலையணை அடியில்-
                         முதலில் அடிக்கடி வெளிச்சமூட்டும் நோட்டிபிகேஷன்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். மொபைலில் இருந்து வெளிப்படும் புறம்பான ஒளி மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இது உடலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த தூக்கத்துடன் பிரச்சினைகளை ஏற்படுகிறது. தலையணை அடியில் மொபைலை வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்தால் அதன் மின்காந்த கதிர்வீச்சினால் தலைவலி ஏற்படும். மேலும் தொலைபேசி வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்களும் ஏற்படலாம்.

Add Comment