சாய்வதற்கு தோள் தேவையில்லை

ஓடும் ரயிலின் வாயில் பகுதியில் ஒருவன் நின்று அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது ஒரு கால் செருப்பு தவறி வெளியே விழுந்து விட்டது. ஒரு விநாடி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது. ஆனால் அடுத்த விநாடியே கழற்றி வெளியே வீசினான்.

உடன் இருந்தவர்கள் ” என்ன தம்பி ஏன் இப்படி செய்தீர்கள்?” என்றனர். அதற்கு அவன் ” செருப்பில் ஒன்றை மட்டும் நான் வைத்திருப்பதால் எனக்கு எந்தவித பயனுமில்லை. ரயில் தண்டவாளம் அருகில் மற்றொரு செருப்பை யாராவது கண்டால் அவர்களுக்கும் பயனில்லை. மற்றையதையும் வீசி விட்டால் அதை எடுப்பவருக்காவது உபயோகப்படட்டும் என்று தான் வீசினேன்” என்றான். தன் துயரத்தை இறக்கிவைக்கத் தோள் தேடும் பலவீனம் அவனிடம் இல்லை, பிறர் துயரம் தீர்க்கும் பெருந்தன்மை பலம் அவனிடம் இருந்தது.
எப்போதும் ஏதாவது ஒரு துயரத்தை நினைத்துக் கொண்டு சுயபச்சாதாபப்படும் நிலையில் இருந்து வெளியேறுங்கள். ஊன்றுகோலுக்காக ஏங்காமல் உங்களுக்கு ஊனம் இல்லை என்று உணருங்கள், நம்புங்கள். பிறரால் நான் கைதூக்கி விடப்பட வேண்டியவன் என்ற எண்ணமே ஒரு கெட்ட வார்த்தை. பலரை உயர்த்தும் பலம் நமக்குள் இருக்கிறது என்று உணருங்கள்.
சாய்வதற்கு தோள் தேடாதீர்கள். மன உறுதி கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்…

Add Comment