மூச்சு…

ஒரு நாள் புத்தர் தன் சீடர்களிடம் “ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு” என்று கேட்டார்.

ஒரு சீடர் எழுபது என்றார், இன்னொருவர் அறுபது என்றார், மற்றொருவர் ஐம்பது என்றார். அனைத்துமே தவறானது என்று சொன்ன புத்தர் ” ஒரு மூச்சு விடும் நேரம்” என்று புன்னகையுடன் சொன்னார். ஆச்சரியம் கொண்ட சீடர்கள் மூச்சு விடும் நேரம் என்பது கணப்பொழுது தானே? என்றனர்.

அதற்கு புத்தர் ” உண்மை, மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான். ஆனால் வாழ்க்கை என்பது மூச்சு விடுவதில் தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும். அந்த கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்” என்றார்.

பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலேயே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் கவலையிலும் வாழ்கிறார்கள்.
நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது. அதை நாம் முழுமையாக வாழ வேண்டும் என்று சொன்னார் புத்தர்…

#Buddha #breath #ThinkingMoment

Add Comment